218 (c) அவ்வாறு செய்வது, மனித உயிருக்கு அல்லது சுகாதாரத்துக்கு அல்லது பாதுகாப்புக்கு ஆபத்தை உண்டாக்கும் என்று கருதிலுைம் அல்லது அதல்ை கலகமோ, சச்சரவோ ஏற்படும் என்று கருதினுலும்; ஆல்ை, இந்த உட்பிரிவில் சொல்லப்பட்டுள்ளது எதுவும், நடைபெற்ற தேர்தல் எதையேனும் ரத்து செய்ய இன்ஸ் பெக்டருக்கு அதிகாரம் அளிக்காது. (2) இன்ஸ்பெக்டர், (a) (b) பகுதிகளில் குறிப்பிட்டுள்ள ஏதாவது காரணத்துக்காக நடவடிக்கை எடுத்துக்கொள் வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது நபருக்கு தமது விளக்கத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். (3) உட்பிரிவு (1), (c) பகுதியின்கீழ் இன்ஸ்பெக்டருக்கு அளித்துள்ள அதிகாரத்தை, அப்பகுதியில் கண்டுள்ள பிரிவுகளே அனுசரித்து கலெக்டரும் பிரயோகிக்கலாம். 148. கலெக்டருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் அவசரகால அதிகாரங்கள் நிர்ணயிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, இன்ஸ்பெக்டர் அல்லது கலெக்டர் அவசர காலங்களில், ஒரு பஞ்சாயத்து அல்லது அதன் நிர்வாக அதிகாரியாவது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அல்லது அதன் கமிஷன ராவது நிறைவேற்ற வேண்டிய ஏதாவது ஒரு வேலே அல்லது செய்யவேண்டிய ஏதாவது ஒரு செயல், அப்போது உடனடி யாக நிறைவேற்றப்படுவது பொதுமக்களின் பாதுகாப்புக்கு அவசியம் என்று கருதில்ை, அவ்வாறு நிறைவேற்ற அல்லது செயல்பட கட்டளையிடலாம். அந்த வேலேயை நிறைவேற்று வதற்கு உண்டாகும் செலவை, பஞ்சாயத்து நிதியின் பொறுப்பு வகிக்கிற அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் நிதியின் பொறுப்பு வகிக்கிற நபர் எந்த நிதியிலிருந்தும் செலவு செய்யக்கூடிய இதர செலவுகளுக்கு முன்பாக இதைச் செய்ய வேண்டும் என்று கட்டளேயிடலாம். ஆனால், அங்கீகாரம் பெற்றுள்ள கட்டணங்களே கொடுத்து தீர்ப் பதற்கான கடன்கள் இருந்தால் அவை இந்த நிபந்தனே யில் அடங்காது. 149 கடமையைச் செய்யத் தவறினல் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் (1) பஞ்சாயத்து தலைவர், நிர்வாக அதிகாரி, பஞ்சர் யத்து யூனியன் கவுன்ஸில் தலைவர், கமிஷனர் ஆகியவர்கள்,
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/409
Appearance