உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 அாசாங்கத்துடன் நேரடிப்பங்கு பெற அவர்கள் விரும்பினர். சில பஞ்சாயத்துகளும், நகரசபைகளும் நிறுவப்பட்டதன் மூலம் ஒருவகையான ஸ்தல சுய ஆட்சி முறைக்கு வழிகோலப் பட்டது. மக்களாட்சி பற்றி ஆங்கிலேயர் கொண்டிருந்த கொள்கையை ஒட்டியே இவை அமைக்கப்பட்டன. சில ஆண்டுகளானதும் பஞ்சாயத்துக்களே அமைப்பதன் மூலம் கிராமங்களுக்கும் சுய ஆட்சி முறை பரவியது, அந்த வகையில் முனிசிபல் வேலைகளேத்தான் பஞ்சாயத் தும் செய்துவந்தது. பஞ்சாயத்துச் சட்டம் முன்னதாகவே நிறைவேற்றப்பட்ட முனிசிபல் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டே நிறுவப்பட்டது. மொத்தத்தில் அது கிராம வாழ்க்கையுடன் இணைந்து கலக்கவில்லை. மக்களின் விருப்பத் தைப் பிரதிபலிப்பதாகவும் அது அமையவில்லை. போதிய அதிகாரமும் பஞ்சாயத்திற்கு இல்லை. பொதுவாக, இப்புதிய அமைப்பில் மக்கள் எதற்கும் அரசாங்கத்தையே எதிர் பார்த்து வாழவேண்டிய நிலையில் இருந்தார்கள். பஞ்சாயத்து முறையை வலிமை உடைய தாக்கக் கூடிய சுயஉதவி, தற்சார்பு ஆகிய இயல்புகள் அன்றைய பஞ்சாயத்து முறையில் இல்லை. மக்கள் தோளோடு தோள்நின்று சொந்தச் சிக்கல்களைத் தீர்க்க முன்வராமல், ஆதரவுதேடி, அதிகாரிகளை எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர். 3. சுதந்திரத்திற்குப் பின்பு நாடு விடுதலை பெற்றதும், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்சள் சட்டத்தை உருவாக்கினர்கள், நாட்டில் குடியரசுப் பிரகடனம் செய்யப் பட்டது. அரசியல் சட்டத்தின் நாற்பதாவது விதியில் ' ராஜ்யமானது கிராமப் பஞ்சாயத்துகளை அமைக்க ஏற்பாடு செய்து, சுய ஆட்சியின் உறுப்புக்களாக அவை வேலை செய்வதற்கு அவசியமான சக்தி களையும் அதிகாரங்களையும் அளிக்க வேண்டும்,' என்று குறிப் பிடப்பட்டிருக்கிறது. அதன்படி, பஞ்சாயத்து என்பது சமுதாயத்தின் பொரு ளாதார சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் வகையில், போதிய அதிகாரங்களுடன் அமைக்கப்பட்ட ஒன்முக இருக்க வேண்டும். முன்பு சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து, சமூகப் பணிகளில் மிகச் சிலர்தான் ஈடுபட்டனர். தற்போது அந்த நிலைமாறி, பாராளுமன்றம்,சட்டமன்றம் அமைக்கும் வகையில்