உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 (3) பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் மன்றம்’ ஆகியவற்றிற்கு அவைகளின் அமைப்புபற்றி பிரஸ்தாப காலத்தில் அமுலிலிருந்து வருகிற சட்டத்தின்கீழ் கொடுக்கப் பட்டுள்ள பொருளேயே இங்கும் குறிக்கும் : (4) ஒரு நபர், ஏதேனும் ஒரு வீட்டின், எந்தப் பாகத்தையாகிலும் தூங்குவதற்கான அறையாகச் சில காலம் உபயோகித்தால், அவர் அந்த வீட்டில் தம்முடைய 'வாசஸ்தலத்தை’ உடையவராக அல்லது அதில் 'வசிப் பவராக” கருதப்படுவார்; மேலும், ஒரு நபர், எப்போ தாகிலும், அப்படிப்பட்ட ஒரு வீட்டுக்கு, இஷ்டப்பட்டால் திரும்பி வரக் கூடியவராயிகுந்து, அப்படி திரும்பிவரும் உத்தேசத்தை விட்டுவிடாமல் இருந்தால், அவர் அந்த வீட்டில் இல்லாத காரணத்தினலேயாவது வேறு இடத்தி லுள்ள இன்னெரு வீட்டில் அவர் வசிப்பதனாலேயாவது, அவர் முதலில் சொன்ன வீட்டிலே வாசம் செய்வது அற்றுப்போய்விட்டதாகக் கருதக்கூடாது : (5) ரெவினியு மாவட்டம்' என்பது, ரெவினியு நிர்வாகக் காரியங்களுக்காக மாவட்ட கலெக்டர் ஒருவரின் பொறுப்பிலிருக்கிற ஏதாவது ஒரு பிரதேச விஸ்தீரணம் : (6) ஆண்டு’ என்பது, நிதி ஆண்டு; (அதாவது ஏப்ரல் தொடங்கி மார்ச் வரை.) 8. மாவட்டங்கள் (1) இந்தப் பிரிவிலே வேறுவிதமாக ஏற்பாடு செய் திருந்தாலன்றி, மற்றபடி, இந்தச் சட்டம் அமுலுக்கு வரும் தேதியன்று, ரெவினியு மாவட்டமா யிருக்கிற ஒவ்வொரு பிரதேச விஸ்தீரணமும் இந்தச் சட்டத்தின் காரியங்களுக் காக ஒரு மாவட்டம் எனக் கருதப்படும். (2) ஒரு ரெவினியு மாவட்டம் அல்லது ஒன்றுக்கு மேற் பட்ட ரெவினியு மாவட்டங்களில் அம்ைப்ப்ாகவுள்ள் ஏதா வது ஒரு பிரதேச விஸ்தீரணத்தை இந்த அரசாங்கத்தார், விசேஷ சந்தர்ப்பங்களில், அறிவிப்புச் செய்து அதன் மூல மாக, இந்தச் சட்டத்தின் காரியங்களுக்காக ஒரு மாவட்ட மாகும் ஒன அறிவிப்பதுடன் அந்த மாவட்டத்தின் பெயரை யும் குறிப்பிடலாம்.