பஞ்சாயத்து எப்படி இயங்குகிறது! 1. பஞ்சாயத்துக்களை அமைப்பது எப்படி? அவற் ல், தராதரங்கள் உண்டா? பஞ்சாயத்துக்களை அமைக்க வேண்டிய அதிகாரி யார்? ஐயாயிரத்துக்கு குறையாத ஜனத்தொகை கொண்டதும்; பத்தாயிரம் ரூபாய்க்கு குறையாத வருஷ வருமானம் உள்ளதும் ஆன ரெவின்யூ கிராமம் ஒவ்வொன்றையும் * பட்டணப் பஞ்சாயத்து என்று ஸ்தல ஸ்தாபனங்களின் இன்ஸ்பெக்டர் அறிவித்து, விளம்பரம் செய்ய வேண்டும். தொடர்ச்சியான இரண்டு ரெவின்யூ கிராமங்களைச் சேர்த்து ஒரு பட்டணப் பஞ்சாயத்தாகவும் குறிப்பிடலாம். {ஆங்கிலத்தில் டவுன் பஞ்சாயத்து என்று குறிப்பிடு வதை, தமிழில் பட்டணப் பஞ்சாயத்து என்று அல்லது * நகரப் பஞ்சாயத்து என்று சொல்லுகிருேம்.) ஐநூறுக்கு குறையாத ஜனத்தொகை கொண்ட ரெவின்யூ கிராமம் ஒவ்வொன்றையும், கிராமப் பஞ்சாயத்து’ என்று குறிப்பிட்டு விளம்பரம் செய்ய வேண்டும். இரண்டு ரெவின்யூ கிராமங்களைச் சேர்த்து ஒரு கிராமப் பஞ்சாயத்தாகவும் அமைக்கலாம். r இவ்விதம் அமைக்கப்பட்ட பட்டணப் பஞ்சாயத்து , ' கிராமப் பஞ்சாயத்து இவற்றின் பெயரைக் குறிப்பிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டு விளம்பரம் செய்ய வேண்டிய வேலை ஸ்தாபன இன்ஸ்பெக்டருடையது. மேலும் பஞ்சாயத்து அமைக்க வேண்டிய தேதி எது என்பதையும் மேற்படி இன்ஸ்பெக்டர் ஒர் அறிக்கை மூலம் குறிப்பிடுவார். 1958-ம் வருஷத்திய சென்னை பஞ்சாயத்துகள் சட்டப்படி அதன் பிரிவுகள், விதிகளுக்கு உட்பட்டு மேற்படி கிராமம் அல்லது பட்டணத்தின் நிர்வாகம் அந்தப் பஞ்சாயத்தைச் சேரும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/50
Appearance