பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 5. (1) ஏதாவது ஒரு கம்பெனியிடமிருந்து அல்லது நபரிடமிருந்து ஏதேனும் ஒரு அரை ஆண்டுக்காக தொழில் வரி சேர வேண்டியுள்ளது அல்லது சேர வேண்டியதாகி விடும், என நிர்வாக அதிகாரி கருதில்ை, அவர் அந்தக் கம்பெனிக்கு அல்லது நபருக்கு அந்த அரை ஆண்டில் அல்லது அடுத்த அரை ஆண்டில் அறிவிப்பு ஒன்றைச் சேர்ப் பிக்க வேண்டும். இந்த விதிகளில் கொடுத்துள்ள நமூளுப்படி விவரக் கணக்கு ஒன்றை, முப்பது நாட்களுக்குக் குறையர் மல் அந்த அறிவிப்பில், குறிப்பிட்க் கூடிய கால அள்வுக்குள் அந்தக் கம்பெனி அல்லது நபர் அனுப்பி வைக்க வேண்டும் என கட்டளேயிட வேண்டும். அந்த அரை ஆண்டுக்கு அந்தக் கம்பெனி அல்லது நபர் எந்த வருமான அடிப்பட்ை யில், தொழில் வரி விதிக்கப்பட வேண்டுமென கருதுகிறது என்பதை அந்தக் கம்பெனி அல்லது நபர் அந்த விவரிக் கணக்கில் குறிப்பிட வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கண்டிருக்க வேண்டும். அதன்மேல் அக்கம்பெனி அல்லது நபர் தொழில் வரி கேட்கப்படுகிற அந்த அரை ஆண்டுக்கு அல்லது அதற்கு முந்திய அரை ஆண்டுக்கு, தமக்குக் கிடைத்த வருமானத்தைக் காட்டுகிற விவரக் கணக்கு ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும். அந்தக் கம்பெனி அல்லது நபர் மேற்படி விவரக் கணக்குக்கு ஆதரவாக நம்பி யிருக்கும் சாட்சியத்தைக் கொண்டு வரவும் வேண்டும். (2) துணை விதி (1)-ன்கீழ் கேட்டுள்ள விவரக் கணக்கு வந்து சேர்ந்து, அது சரியாகவும் பூரணமாகவும் இருக்கிறது என நிர்வாக அதிகாரி சந்தேகமறத் தெரிந்து கொண்டால், அந்த அடிப்படையிலேயே ஆந்தக் கம்பெனியிடமிருந்து அல்லது நபரிடமிருந்து அவர் தொழில் வரி விதித்து வாங்க வேண்டும். விளக்கம்:-3-வது விதியின் (2) துனே விதியைச் சேர்ந்த (b) பகுதியின்கீழ் வராத விஷயங்களில், அந்தக் கம்பெனி அல்லது நபர் இந்திய வருமான வரிச் சட்டத்தின் 29-வது பிரிவின்கீழ் தம்மிடம் அந்த அரை ஆண்டு உட்பட்ட ஆண்டு க் த க ச் சேர்ப்பிக்கப்பெற்ற வரும்ான வரி அறிவிப்பைக் கொண்டு வந்து கொடுத்தால், பஞ்சாயத்துச் சட்டத்தின்கீழ் தொழில் வரி விதிக்கத்தக்க ஆதாரங்க்ளி லிருந்து பெறப்பட்ட வருமானமாக அந்த அறிவிப்பில் சொல்லியுள்ள வருமானத்தில் ஒரு பாதியை, தொழில் வரி விதிக்கும் காரியத்துக்காக, அந்த ஆதாரங்களிலிருந்து