பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை கனம் பிரதம நீதிபதி உயர்திரு எம். அனந்தநாராயணன் அவர்களின் கருத்துரை எழுதப்படும் வாசகங்கள&னத்தினும மிகவும் கவர்ச்சி யற்ற வாசகத்தைக் கொண்டவை சட்டங்கள்தாம், எந்தச் சட்டத்தையும் கடமைக்காக ஒருவர் படிக்கலாமேயொழிய, இன்பத்திற்கென்று அதை எவரும் படிப்பதில்லை.’ இவ்வாறு சி. கே. ஆலன் (C. K. Allen) என்ற ஆங்கிலச் சட்ட வல்லுநர் கூறியுள்ளார். சட்ட வாசகம் கவர்ச்சியற்றது என்பது மட்டுமன்று. அந்த வாசகத்தின் பொருளேக் கண்டு அதற்கு விளக்கம் கூறுவதும் நீதிபதிகளின் முக்கிய அலுவலாகிறது. மேலும் சட்டத்தில் கையாளப்பெறும் வாசகத்தில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல், தெளிவு, மயக்க மின்மை, இந்தப் பண்புகள் அமைந்திருக்க வேண்டும். பல ஆண்டுகளாகச் சட்டத் துறையில் கையாளப்பெற்று, வளர்ந்து வளம்பெற்ற மொழி ஆங்கிலமாகும். நுட்பமான சட்டக் கருத்துக்களேத் தெள்ளிய முறையில் காட்டும் கலேச் சொற்களும் சொற்ருெடர்களும் வாசக அமைப்பும் சட்ட மரபில் வளர்ந்துள்ள ஆங்கில மொழியில் அமைந்துள்ளன.