#31 8. விதித்து வாங்கும் ஒவ்வொரு கட்டண விகிதத்திற் காகவும் டிக்கெட் புத்தகங்கள் தனித்தனியே அச்சிடப்பட வேண்டும். 4. மேற்படி மார்க்கெட்டுகளின் சொந்தக்காரர்கள், அனுபோகதாரர்கள், அல்லது குத்தகைதாரர்கள் அந்த மார்க்கெட்டுகளிலிருந்து கிடைத்த வருமானம் பற்றியும், அவற்றை நிர்வகித்து வருவதற்கு ஆன செலவு பற்றியும் சரியான, பூரணமான கணக்குகள் வைத்து வர வேண்டும். பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி, அல்லது அவரிடமிருந்து அதிகாரம் பெற்றுள்ள இதர நபர்கள் கணக்குப் புத்தகங் களேப் பார்வையிடுவதற்காக, சோதிப்பதற்காக, அல்லது தணிக்கையிடுவதற்காக கேட்கும்போதெல்லாம் அவற்றைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டும். .- ... 5. வசூல்கள், செலவுகள் பற்றிய பதிவேடு ஒன்றை, இணைப்பில் கொடுத்துள்ள முறையே 11-வது IV-வது நமூளுவின்படி வைத்து வர வேண்டும். பதிவேடுகளையும், டிக்கெட்டுகளேயும், ரசீதுகளேயும் மாதத்திற்கு ஒரு முறையா கிலும், பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி, அல்லது அவரது அதிகாரம் பெற்ற இதர நபர் சோதித்து, பார்த்து வேண்டிய குறிப்புகளே அதில் எழுதி வைக்கவேண்டும். கனக்குகள் சரிவர எழுதி வரப்பட்டதாகத் தெரியவந்தால், பதிவேடு களில் அதைப்பற்றிய சான்று ஒன்றை எழுதி வைக்க வேண்டும். 6. மார்க்கெட்டைத் திறந்து வைக்க லேசென்ஸ் கோரும், அல்லது லேசென்ஸைப் புதுப்பிக்கக் கோரும் ஒவ் வொரு விண்ணப்பத்துடனும் அறிக்கை ஒன்றைச் சேர்த்து அனுப்ப வேண்டும். அந்த அறிக்கையில் கடந்த ஆண்டுக் காக (அல்லது லேசென்ஸ் கோரிய விண்ணப்பத் தேதிக்கு முற்பட்ட பன்னிரண்டு மாத கால அளவுக்காக) அந்த மார்க் கெட்டின் வரவு செலவுகள் கண்டிருக்க வேண்டும். பஞ்சா யத்து நிர்வாக அதிகாரி லேசென்ளைப் புதுப்பிப்பதற்கு முன் மேலே குறித்துள்ள அறிக்கையை அந்த மார்க்கெட்டின் சொந்தக்காரர், அனுபோகதாரர், அல்லது குத்தகைதாரரின் கணக்குப் புத்தகங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கவேண்டும். 7. 4-வது, 5-வது அல்லது 6-வது விதியில் சொல்வி யிருப்பவைகளில் ஏ .ே த னு ம் அனுசரிக்கப்பட்டிருக்கா விட்டால், அந்த லேசென்ஸைப் புதுப்பிக்க பஞ்சாயத்து மறுக்கலாம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/618
Appearance