139 மேலே சொன்ன முறையில், பஞ்சாயத்தில் நிலைபெற் றுள்ள சொத்துக்களின் பட்டியலேக் கிராம அதிகாரிகள் தயாரிக்கும் விஷயத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இத்தகைய பட்டியல்கள், அடுத்த ஜமாபந்திக்குள் பரிசீலனே செய்யப்பட்டு, பஞ்சாயத்துத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பஞ்சாயத்து தலைவர்களின் ஒப்புதல்களேப் பெற்று ஜமாபந்தி முடிவடைந்தவுடன் அவற்றை தாலுக்கா அலுவலகத்தில் தாக்கல் செய்யவேண்டும். ஒரு காரணத்தினுல் அடுத்த ஜமாபந்தியில் தயாரிக்கப் பட்டு பரிசீலனை செய்யப்படும் ஒரு பட்டியல் பூரணமானதாக இல்லாவிட்டால், பின் சேர்க்கைப் பட்டியல் ஒன்று கூடிய விரைவில் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளி டம் ஒப்படைக்கப்பட வேண்டும். மேற்படி சட்டத்தின் 164-வது பிரிவின்கீழ் நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் எழுதிய உத்திரவின் மூலம் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அதிகார எல்லேக்குள் உள்ள ஒரு ரெவின்யு கிராமத்தின் தலேவர் அல்லது கர்ணம் அல்லது அந்த இருவரையும் நிர்ணயிக்கப்படக்கூடிய வகைகளின் கீழ் வருகிற ஒரு விஷயம் குறித்து தகவல் கொடுக்குமாறு கோரலாம். 10. பஞ்சாயத்துக்களினுல் முறைப்படுத்தப்படும் புறம்போக்குகள் புதிய சட்டத்தின் 86 (4) பிரிவின்கீழ், (இது பழைய சட்டத்தின் 60 (4) பிரிவிற்கு நிகரானது.) மேலே 4-வது பாராவில் குறிப்பிட்டுள்ளது நீங்கலான ஒரு புறம்போக்கைப் பயன்படுத்துவதை முறைப்படுத்துவதற்குப் பஞ்சாயத்துக்கு அதிகாரம் உண்டு. அதாவது, இது குறித்து அரசாங்க உத் தரவில்ை பஞ்சாயத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தால், மேற்சொன்னவாறு முறைப்படுத்த பஞ்சாயத்துக்கு அதிகாரம் உண்டு. புதிய சட்டத்தின் 86 (4) பிரிவின்கீழ் உத்தரவுகள் பிறப்பிக்க அரசாங்கத்தினருக்குள்ள அதிகாரங்களே மாவட் டக் கலெக்டர்களுக்கு அதிகாரப் பிரிவினே செய்து கொடுக்கப் Lil' (95r6Irġi. (G.O. No. 76, L.A. 12–1-1960) இந்தப் பிரிவின் உட்பிரிவுகளே மாவட்டத்திலுள்ள பஞ்சாயத்துகளுக்குக் கலெக்டர்கள் தெரிவிக்க வேண்டும். ஒரு பஞ்சாயத்து, ஒரு புறம்போக்கை அந்தக் கிராமத்தின் நன்மைக்காக முறைப்படுத்துவதற்கு அதிகாரம் கோரி
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/676
Appearance