201 5. இதன்படி, இந்த விஷயத்தில், இதற்குமுன் பிறப் பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளேயெல்லாம் தள்ளுபடி செய்து கிராமப் பஞ்சாயத்துகள் 1961-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கை அடிப்படையாகக் கொண்டு மேலே நான்காவது பாராவில் சொல்லியுள்ளபடி ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்றும், மேலே குறிப்பிட்டுள்ள விகிதத்தில் பஞ்சாயத்து குமாஸ் தாவுக்கு அளிக்கப்படும் உயர்ந்த பட்ச சம்பளமோ, படியோ ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் நிர்ண் யிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிடுகிறது. 6. கிராமங்களில் பஞ்சாயத்து குமாஸ் தாக்களின் பணிகள் பகுதிநேரப் பணிகளாகத்தான் கருதப்பட வேண்டு மாகையால், மேலே நான்காவது பாராவில் வரையறுக்கப் பட்டுள்ள சம்பள விகிதம் அந்த ஊழியருக்குப் போதுமா னவை என்று அரசாங்கம் கருதுகிறது. சில விசேஷ சந்தர்ப் பங்களில் பகுதிநேர குமாஸ்தாவுக்கு கொஞ்சம் உயர்வாக ஊதியம் கொடுத்தாலன்றி அவர் கிடைக்கமாட்டார் என்றும், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அந்த ஊதியத்தை பஞ்சா யத்து தாராளமாகக்கொடுக்க இயலும் என்றும் சொல்லப் பட்டுள்ளது. அப்படி ஒரு அசாதாரணமான சந்தர்ப்பம் உண்மையிலேயே ஏற்பட்டுள்ளது என்று கலெக்டர் கருதி ல்ை, அவர் (சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தின் வேண்டு கோளின் பேரில்) அதிகப்படியான ஊதியம் அளிக்க பஞ்சா யத்துக்கு விசேஷ அனுமதி அளிக்கலாம். அந்த ஊதிய மானது மாதத்திற்கு 50 ரூபாய்க்கு மேல் போகக் கூடாது. அத்துடன் மேலே நான்காவது பாராவில் வரையறுக்கப்பட் டுள்ள தொகையின் அளவுக்கு, மாதம் ஒன்றுக்கு, 10 ரூபாய்க்கு மேலும் போகக் கூடாது. - (G. O. No. 2339. L. A. & R. D, 28-8-1961) 84. பஞ்சாயத்துகள் சார்பாக, கிராம அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலைகள், அபிவிருத்திப்படி முதலியன 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதியுள்ள கிராம அபிவிருத்தித் துறையின் உத்தரவு எண் 644-ல் 7-வது பாராவில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின்படி (குறிப்பு : அரசாங்க உத்தரவு எண் 644. இதில் இ&ணக்கப் பட்டிருக்கிறது-ஆசிரியன்) கிராம அளவில், கிராமப் பஞ்சா யத்துகள் திட்டமிடுகிற அதிகாரம் பெற்ற ஸ்தாபனங்களாகச் III-14
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/688
Appearance