211 வருகிற வசூல் பங்கீடு முறையைத் தொடர்ந்து நடத்தி வர வேண்டியிருப்பினும், இந்த நடைமுறையைக் கூடிய விரைவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டபின் மாற்றி அமைக்கவேண்டும் ; ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் கொடுக்க வேண்டிய தொகையைப்பற்றி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தார் கணக்கிட வேண்டும். 4. ஆகவே, பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தில் உள்ள வெவ்வேறு பஞ்சாயத்துக்கும் கொடுக்கத்தக்கதாகிற தொகையில் கணிசமான அளவு பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகளால் வகுக்கப்பட்டு, பஞ்சாயத்துக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் என்பதே இதன் மூலம் தெரிகிறது. - 5. இது தவிர, தற்போது இருந்து வரும் ஏற்பாட்டின் படி, 100 பஞ்சாயத்துகளுக்கு மேற்பட்ட விஷயத்தில் ஒவ்வொரு சப் டிரஷரியும் சொந்த டெபாஸிட் கணக்கை” வைத்து வர வேண்டும் என்றும் பஞ்சாயத்துகள் முழுவதும் அமைக்கப்பட்ட பின்பு, வேலேப் பளு மேலும் அதிகரிக்க லாம் என்றும் மேன்மேலும் வற்புறுத்தப்பட்டது. சொந்த டெபாஸிட் கணக்குப் பாஸ் புத்தகத்தை நாளது தேதி வரையில் தயாரித்து நிதி ஆண்டு முடிவில் சான்று உறுதி பெற்ற இருப்பு இவ்வளவு என்பதற்கு சம்மதம் பெறுவதற்கு அந்த பாஸ் புத்தகத்தை அவ்வப்போது அனுப்பி வைப்பதி லுள்ள நடைமுறை கஷ்டங்களும் தெரிவிக்கப்பட்டன. 1958-ம் ஆண்டு சென்னேப் பஞ்சாயத்துச் சட்டத்தை அமுல் படுத்துவதன் விளேவாக, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஏற்படும் அதிகப்படியான பற்று வரவு கணக்கு விவகாரங் களே முன்னிட்டும், இனி வரும் திட்ட காலங்களில் அபி விருத்தி வேகத்தைப் பொருத்தும் பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்களுக்குத் தேவைப்பட்ட பணத்தை அதிக சிரமமின்றி பெற்றுக்கொள்ளும் வழி வகைகளே ஏற்படுத்தித் தரவேண் டியது அவசியமாகிறது. இப்படிப்பட்ட ஏற்பாடுகளேச் செய்து தருகையில், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள் திறம்படப் பணியாற்றுவதற்கு அளிக்கப்பட்டிருக்கிற வசதி களேயும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் இந்தப் புதிய ஏற்பாடு தீவிரமான ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் கீழ் மட்டத்தில் ஏற்படுத்தவும் வேண்டும். 6. பஞ்சாயத்து யூனியன் நிலையில், இப்போது செய் துள்ள அதிகப்படியான நிர்வாக ஏற்பாடுகளைப்பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்து
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/698
Appearance