பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 யூனியனுக்கு ஒரு பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் உண்டு. பஞ்சாயத்துகள் தங்கள் வேலேகளிலும் தங்களுடைய கணக்குகளே வைத்து வருவதற்கும் இந்த அலுவலர் வழி காட்டி உதவிபுரிவார். ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும் ஒரு நிர்வாகி, பயிற்சி பெற்ற அக்கவுண் டெண்ட், காஷியர் ஒருவர் ஆகியோர் இருக்க வேண்டும். 7. மேற்கண்ட எல்லா அம்சங்களேயும் கவனமாக ஆராய்ந்து பார்த்து அரசாங்கத்தார் அடியிற் கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கின்றனர் : (i) சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளைக் கொண்ட ஒரு பஞ்சாயத்து யூனியனே ஆரம்பித்த தேதி முதற்கொண்டு, ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தும் சப் டிரஷரியில் சொந்த் டெபாஸிட் கணக்கை வைத்து வருகிற தற்போதைய முறையை முடிவு கட்ட வேண்டும். பஞ்சாயத்து யூனி யனில் சேர்க்கப்பட்ட எல்லா கிராமப் பஞ்சாயத்துகளின் சார்பிலும் பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் தான் பஞ்சா யத்து யூனியன் அமைந்துள்ள தாலூகா சப் டிரஷரியில் சொந்த டெபாஸிட் கணக்கை வைத்து வர வேண்டும். பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் வைத்து வருகிற இத்தகைய சொந்த டெபாஸிட் கணக்குக்கு’த்தான் கிராமப் பஞ்சா யத்துகள் தொகுப்பு நிதி என்று பெயர். இது பஞ்சாயத்து யூனியனிலுள்ள சகல கிராமப் பஞ்சாயத்துகளின் சார்பிலும் வைத்து வரப்படும். கிராமப் பஞ்சாயத்துகள் தங்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் பணத்தைப் பெறுவதற்கும் அது குறித்துச் செயலாற்றவும் பஞ்சாயத்து யூனியன் கமி ஷனர் ஒரு பணப் பெட்டியை வைத்துவர வேண்டும், பஞ்சா யத்து யூனியன் கமிஷனர் தம்முடைய அலுவலகத்தில் ஒவ் வொரு கிராமப் பஞ்சாயத்துக்கும் தனித் தனியான கணக்கு களே வைத்து வருவார். பணப் பெட்டியை வைத்து வருவது பண விவகாரம் நடத்துவது, பணப் பெட்டிக்குள் பணத்தை வைப்பதும் அதிலிருந்து பணத்தை எடுப்பதும் ஆகிய நடைமுறைகளைக் கிராமப் பஞ்சாயத்துகள் எவ்வாறு செய்வது என்பது குறித்தும், எந்த நமூனுக்களின் பிரகாரம் பணத்தைக் கட்ட வேண்டும், எடுக்க வேண்டும் என்பது குறித்தும் விவரித்துள்ள அரசாங்கக் குறிப்பு ஒன்று இதில் இணேக்கப்பட்டிருக்கிறது. (ij) பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், வைத்து வருகிற கிராமப் பஞ்சாயத்து தொகுப்பு நிதிக் கணக்கு, ஸ்தல