237 விளக்கம்:-தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட அபேட்சகர்களின் தேர்தல் ஆட்சேபிக்கப்பட்டால்,அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அபேட்சகர் விஷயமாகவும் தனித்தனியே டெபாசிட் கட்ட வேண்டும். (2) துணை விதி 1ன் பிரிவுகள் அனுசரிக்கப்படா விட்டால், தேர்தல் நீதிமன்றம் அந்த மனுவை நிராகரிக்க வேண்டும். (3) துணை விதி 1ன் பிரிவுகள் அனுசரிக்கப்படுவதன் மேல், தேர்தல் நீதிமன்றம் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். 5. தேர்தல் நீதிமன்றம், இயன்ற விரைவில், அந்த மனுவின் பிரதி ஒன்றை, ஒவ்வொரு எதிர் மனுதாரருக்கும், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் கமிஷன ருக்கும் தேர்தல் அதிகாரிக்கும் சேர்ப்பிக்கச் செய்ய வேண்டும். தேர்தல் நீதிமன்றத்திலும் பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலகத்திலும் உள்ள விளம்பரப் பலகையில், அதன் பிரதி ஒன்றை ஒட்டிவைக்க வேண்டும். மேற் கொண்டு ஆகும் செலவுகளேக் கொடுப்பதற்காக, தேர்தல் நீதிமன்றம் உத்தரவிடக் கூடிய தொகை க்கு ஜாமீன்களுடன் மனுதாரர் ஜாமீன் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும் என மேற்படி நீதிமன்றம் அந்த மனுதாரருக்குக் கட்டளே யிடலாம். அவ்வாறு விளம்பரம் செய்த பிறகு, பதின்ைகு நாட்களுக்குள் எப்போதாகிலும் வேறு யாராவது ஒரு அபேட் சகர் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட உரிமை யுள்ளவரா வார். அவ்விஷயத்தில் தேர்தல் நீதிமன்றம் கேட்கக்கூடிய ஜாமீனேக் கட்டிவிட வேண்டும். 6. (1) ஒவ்வொரு தேர்தல் மனுவையும் தேர்தல் நீதி மன்றம் இயன்றவரையில் 1908-ம் ஆண்டு சிவில் வழக்கு முறைச் சட்டத்தின்கீழ் வழக்குகளுக்குப் பயன்படுகிற நடை முறையை அனுசரித்தே விசாரணை செய்ய வேண்டும் : ஆல்ை, நீதிமன்றம், தான் விசாரிக்கிற சாட்சிகளின் சாட்சியத்தின் சாராம்சக் குறிப்பை மட்டும் எழுதிவைப்பது போதுமானதாகும். (2) அடியிற் கண்ட விஷயங்கள் சம்பந்தமாக வழக்கு ஒன்றை விசாரணை செய்கையில், 1908-ஆம் ஆண்டு சிவில் வழக்கு முறைச் சட்டத்தின் கீழ் ஒரு நீதி மன்றத்துக்கு உள்ள அதிகாரங்களேயே தேர்தல் நீதி மன்றமும் கொண்டதாகும்: (a) கண்டு பிடித்தலும் பார்வையிடுதல்;
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/723
Appearance