பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/829

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 மத்திய நிலையம், மத்திய அரசாங்கத்தாரால் நிறுவப்பட் டுள்ளது. நான்கு முதல் ஐந்து வாரங்கள் பயிற்சிக் கால மாகும். (2) சமுதாய அபிவிருத்தி அதிகாரிகளுக்கு மறு பயிற்சி அளிக்கும் பயிற்சி நிலையங்கள். சமுதாய அபிவிருத்தி அதிகாரிகளுக்கு மறுபயிற்சி அளிக்கும் திட்டத்தை இந்திய அரசாங்கத்தின் சமுதாய அபிவிருத்தி அமைச்சகம் அங்கீகாரம் செய்துள்ளது. அதை அனுசரித்து கீழ்க்கண்டவாறு மூன்று பகுதிகளாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது : (a) வட்டார அபிவிருத்தி அதிகாரிகள், சமூகக் கல்வி அமைப்பாளர்கள், வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு மறு பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சிக் காலம் 45 தினங்களாகும். - (b) வட்டார அபிவிருத்தி அதிகாரிகள், மாவட்ட துறைத் தலைவர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி 22 தினங்களுக்கு அளிக்கப்படுகிறது. (c) வட்டார அபிவிருத்தி அதிகாரிகளுக்கு, பணி பற்றிய பாடப் பயிற்சி அளிக்கப்படும். இது 45 தினங்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த ராஜ்யத்தின் அதிகாரிகள் ஹிமயதசாகர், மைசூர் ஆகியவற்றிலுள்ள நிலேயங்களுக்கு பயிற்சிக்காக அனுப்பப் படுகின்றனர். இதைப் போன்ற ஒரு பயிற்சி நிலேயம் இந்த ராஜ்யத்தில் விரைவில் பவானிசாகரில் நிறுவப்படும், (3) கிராம வளர்ச்சிப் பயிற்சி நிலையங்கள். இந்த ராஜ்யத்தில் ஏழு கிராம வளர்ச்சிப் பயிற்சி நிலேயங்கள் உள்ளன. இவற்றில் வட்டாரங்களுக்கான கிராம சேவக்குகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இந்நிலை யங்கள் கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன: (1) கிராம வளர்ச்சிப் பயிற்சி நிலேயம், ஆடுதுறை, தஞ்சாவூர் ஜில்லா. (2) கிராம வளர்ச்சிப் பயிற்சி நிலையம், பட்டுக் கோட்டை, தஞ்சாவூர் ஜில்லா. (3) கிராம வளர்ச்சிப் பயிற்சி நிலையம், கோவில்பட்டி, திருநெல்வேலி, ஜில்லா.