47 ஆனல், ஏதாவது ஒரு தீர்மானம் சட்ட வரம்பை மீறி யிருப்பதாக அவர் கருதினால், அந்தத் தீர்மானத்தை அரசாங் கத்தாருக்கு அனுப்பி ஆலோசன்ை கேட்கலாம். இதுபற்றி அரசாங்கம் அளிக்கும் உத்தரவே முடிவானது, ஒரு குறிப்பிட்ட தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டு வருவதால் பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, உயி ருக்குப் பாதகம் ஏற்படும் என்று நிர்வாக அதிகாரி கருதினாலும் சர்க்காருக்கு அனுப்பி ஆலோசனை கேட்கலாம். இது பற்றி அரசாங்க உத்தரவே முடிவானது, 47. கமிட்டிகளை அமைப்பது எப்படி? குறிப்பிட்ட காரியங்களைக் கவனிப்பதற்காக கமிட்டிகள் நியமிக்கலாம். அடுத்தடுத்துள்ள இரண்டு பஞ்சாயத்துகளுக்கு பொது வான ஒரு வேலே இருப்பதாக வைத்துக்கொள்வோம். இரண். டுமாகச் சேர்ந்து, ஒத்துழைத்து வேலை செய்தால்தான் அது நடைபெறும், எனவே, இதற்கான ஒரு கூட்டுக் கமிட்டி அமைக்கலாம். ஒவ்வொரு பஞ்சாயத்தும் அந்தக் கூட்டுக் கமிட்டிக்கு தனது பிரதிநிதியை"நியமிக்கும். இவர்கள் கூட்டாகச் செயலாற்றி அந்த வேலையை நிறைவேற்றலாம். கமிட்டிகளின் அமைப்பு, அதிகாரம், நடைமுறை சம்பந்த மாக விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, அதன்படி இயங்க வேண்டும். ★ 责 寅 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலும், தனது வேலைகளை நல்ல முறையில் செய்து முடிக்க கமிட்டிகளை அமைக்கலாம். கவுன்சில் அங்கத்தினர்களில் சிலரும், வேறு சிலரும் இந்தக் கமிட்டிக்கு நியமிக்கப்படலாம். ஆனல் கவுன்சில் அங்கத்தினர்கள் மூன்ற பேர் இருந்தால் அங்கத்தினர் அல்லாத பிரதிநிதி ஒருவர்தான் இருக்கலாம். 48. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது எப்படி? ஒரு பஞ்சாயத்தின் தலைவர் அல்லது துணைத் தலைவரு டைய நடத்தை சரியாக இல்லாமல், அவர் அங்கத்தினர்களு டைய நம்பிக்கையை இழந்து விடுகிருர் என்று வைத்துக்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/83
Appearance