பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/901

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தீர்ப்பின் சாரம் இரண்டு காரணங்களுக்காக இந்த அறிவிப்பை ஆ கேஷ பி க்க ப்ப டு கி றது. (1) ஒரத்தன்குடிக்காடை, தெலுங்கன்குடிக்காட்டிலிருந்து பிரிப்பதற்கான காரணங்களே பஞ்சாயத்துக்கு அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிடவில்லை. (2) இது சம்பந்தமாக அதிகாரம் வழங்கப்படாமல் இருக் கும்போது அரசாங்கத்தின் முன்அனுமதி பெற்றிருப்பதானது எல்லா நடவடிக்கைகளேயும் பழுதாக்கிவிட்டது. 1961-ம் வருவடித்திலேயே, மேற்படி பஞ்சாயத்தை இரண்டாகப் பிரிக்கும்படி தீர்மானம் நிறை வேற்றி அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தக் கோரிக்கையானது தள்ளி வைக்கப்பட்டு வந்திருக்கிறது. காரணங்கள் காட்டா ததால் பஞ்சாயத்தானது தன்னுடைய ஆகேஷபனேகளே தெரிவிக்க முடியவில்லே என்று மனுதாரர் சொல்லவில்லே. எனவே, மேற்கூறிய காரணங்கள் நிராகரிக்கப்படுகின்றன. பஞ்சாயத்தை பிரிப்பதற்காக அரசாங்கம் அங்கீகாரம் தருவதற்குச் சட்டத்தில் அனுமதி இல்லே என்று வாதாடப் படுகிறது. 157 (5) பிரிவின்கீழ் இன்ஸ்பெக்டர் தம்முடைய அதிகாரத்தை அரசாங்கத்தின் மேல் அதிகாரத்துக்கு உட் பட்டுச் செலுத்தலாம் என்று விதிக்கிறது. மனுதாரர் சார் பில், அரசாங்கத்தின் மேலதிகாரம் நிர்வாக காரியங்களுக் குப் பிரயோகமாகுமே தவிர, நீதிச்சார்புடைய செயல் களுக்குப் பயன்படுத்த முடியாது என்று வாதிக்கப்பட்டது. மேலும், இந்தப் பிரிவின்கீழ், ஒரு குறிப்பிட்ட காரியத்தை, அதிகாரிகள் செய்யாதவாறு தடுப்பதற்குத்தான் அரசாங் கத்தால் இயலுமே தவிர, எந்த ஒரு காரியத்தையும் செய்யும்படி உத்தரவிட முடியாது என்று வாதாடப்படு கிறது. மற்றும், மேலே குறிப்பிட்டவாறு மேலதிகார பிர யோகமானது, ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தை கட்டுப் படுத்த மட்டுமே அல்லாமல் சட்டத்தில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பொருந்தும். எனவே, 3-வது பிரிவின்கீழ், இன்ஸ்பெக்டர் செய்யும் செயல்கள் நீதிச் சார்புடையனவா இல்லையா என்று தீர்மா னிக்க அவசியம் இல்லை. மேலதிகாரம் என்பது எந்த ஒரு காரியத்தையும் செய்யும்படி உத்தரவிடவும், செய்யாதவாறு தடுக்கவும் பயன்படும்.