உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


சக்தி கிடையாது. என்னை விட்டுவிடு. தயை செய்து என்னைக் காப்பாற்று முருகா_!"

கைலாச முதலியார் தம்மை மறந்தவராய் 'முருகா முருகா!' என்று வாய்விட்டுப் புலம்பிக் கொண்டார். பிறகு அந்த முருகனின் திருவுருவத்தையே மனக்கண் முன்னால் கற்பனை சொரூபமாக நிலை நிறுத்தி, முருக நாம் ஸ்மரணையின் மூலம் மனத்தை ஒருநிலைப்படுத்தித் தூங்க முயன்றார்; ஆனால், அந்த முருகனுடைய சன்னிதியிலும் ஏகாம்பர முதலியாரின் இனம் தெரியாத உருவம்தான் அடிக்கொருதரம் இடையிட்டு மறித்துக் கொண்டிருந்தது.

அருணோதப்பொழுதில் எங்கோபக்கத்து வீட்டில் தெருவாசல் பெருக்கி, தண்ணீர் தெளிக்கும் சப்தம் கேட்கும் சமயத்தில்தான் அவருக்குக் கண்கள் லேசாகக் கிறங்கின; சிறிது தேரத்தில் அவர் தூங்கிவிட்டார்.

காலை எட்டு மணி சுமாருக்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கைலாச முதலியாரை, அவரது மனைவி தங்கம்மாள் உசுப்பி எழுப்பினாள்.

"உங்களைத்தானே!"

எதிர்பாராதவிதமாக, வழக்கத்துக்கு விரோதமாக, தம் மனைவிதம்மைத்தட்டி எழுப்புவதை உணர்ந்த அவர் திடுக்கிட்டு விழித்தெழுந்தார். கண்களைக் கசக்கிக் கொண்டே, ”எவனாவது வந்திருக்கானா?"என்று படபடத்துக் கேட்டார்.

"ஒண்ணுமில்லே. நம்ம் ஆறுமுகத்துக்கு உடம்புக்குச் சரியில்லே. காப்பித் தண்ணிகூட வேண்டாமின்னுட்டான் காய்ச்சலானா பொரிச்சுத் தட்டுது. கிடையாகக் கிடக்கிறான். ராத்திரியே அவனுக்கு மேல் காஞ்சிது; உங்களை எழுப்பிக் காட்டலாமின்னு நினைச்சேன். தூக்கத்திலே எழுப்ப வேண்டாமின்னு இருந்திட்டேன்" என்று சொல்லி