பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


டாக்டர் ஆறுமுகத்தைப் பரிசோதித்தார். பரிசோதித்து முடித்துவிட்டு, மணியிடம் திரும்பி, "மிஸ்டர் மணி, இது மிகவும் நெருக்கடியான கட்டம். நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம், ஒரு ஊசி போடவேண்டும்” என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு, கைலாச முதலியாரிடம் திரும்பி, "பையனுக்கு ஊசி போடணும். நான் ஒரு மருந்து எழுதித் தருகிறேன். ஆளையனுப்பி வாங்கிவரச் சொல்லுங்கள். பத்துப் பத்தரைக்குள் நான் திரும்பவும் வந்து ஊசியைப் போட்டுவிட்டுச் செல்கிறேன்" என்று நிதானத்தோடு கூறிவிட்டு ஒருதுண்டுத்தாளில் மருந்தின் பெயரை எழுதிக் கொடுத்தார்.

டாக்டர்வெளிச்சென்றபிறகு, தங்கம்மாள் மணியைப் பார்த்து "ஏம்ப்பா, டாக்டர் என்ன சொன்னாரு" என்று கேட்டாள்.

"ஒன்றும் பயமில்லைன்னுதான் சொன்னார்" என்றான் மணி.

ஏனோ அவன் குரல் கம்மி உடைந்து கரகரத்தது.

கைலாச முதலியார் டாக்டர் எழுதிக்கொடுத்த சீட்டை எடுத்துக் கொண்டு வெளி முற்றத்துக்கு வருவதற்கும், இருளப்பக் கோனார் வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.

"முதலாளி, பிள்ளைக்கு எப்படியிருக்கு?" என்று வந்ததும் வராததுமாய் ஆவலுடன் விசாரித்தார் இருளப்பக் கோனார்.

"இன்னம் கண்ணே முழிக்கலே. இப்பதான் டாக்டர் வந்துட்டுப் போனார். சரி, வாரும் இப்படி" என்று கூறிக் கொண்டே, முன்கட்டிலுள்ள தமது கடையைத் திறந்து, பட்டறையில் அமர்ந்தார். இருளப்பக் கோனார் மரியாதையோடு வந்து அவரருகில் நின்றார்; கைலாச முதலியார் இரும்புப் பெட்டியைத் திறந்து, பணம்