பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185


சங்கர் மட்டும் மணியைத் தைரியமாயிருக்கச் சொல்லிப் பலவாறு தேற்றினான். சங்கரின் தைரிய மொழிகள் மணிக்குத் தெம்பும் ஆறுதலும் தருவன வாயிருந்தன.

"நீ உன் குடும்பத்துக்கு நேர்ந்த கதியைப்பற்றிவீணாய் மனத்தை அலட்டிக்கொள்ளக் கூடாது. இது தான் என் வேண்டுகோள்" என்று கூறி முடித்தவாறே சங்கர் புறப்படத் தயாரானான்.

"அப்போ -நான் வரட்டுமாமணி?" என்றான் சங்கர்.

கமலா அப்போதுதான் திடீரென்று ஞாபகம் வந்தவளாக தன்வசமிருந்த பையை எடுத்தாள். "அத்தான், உங்களுக்குக் காஷ்மீர் திராசஉன்னா ரொம்பப் பிரியமேன்னு வாங்கிக்கிட்டு வந்தேன்" என்று கூறியவாறே இரண்டுகுலை திராவசைப்பழங்களை எடுத்துக்கட்டிலுக்கு அருகே கிடந்த மேஜை மீது வைத்தாள்.

அந்தப் பழங்களைக் கண்டு ஆச்சரியமடைந்த சங்கர் "அடேடே, இதை நீ என்னிடம்கூடச் சொல்லவில்லையே. பங்குக்கு வந்துவிடுவேன் என்று பயமா?" என்று கூறிச் சிரித்தான்.

இதற்குள் டாக்டர் நடராஜன் குறுக்கிட்டு, "என்னம்மா கமலா, என்னுடைய அனுமதியில்லாமல் என் பேஷியண்டுக்கு நீங்கள் பழம் வாங்கிக் கொடுக்கிறீர்களே. இது நியாயமா?" என்று கேலியாகக் கேட்டார்.

"அதற்கென்ன? ஒரு குலையை வேண்டுமானால் நீங்கள் அபராதமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி களுக்கென்று சிரித்தாள் கமலா.

அங்கு நிலவிய குதூகலத்தைக் கண்டு மணிக்குக் கவலையெல்லாம் மறைந்து இன்பவுணர்ச்சிதோன்றுவது போலிருந்தது. சங்கர் விடைபெற்றுத் திரும்பும்போது "சங்கர், நான் அம்மாவைப் பார்க்கணும்" என்று கேட்டுக் கொண்டான் மணி.