பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198


ஒருத்திதான் பக்கத்திலே இருக்கா. ஆனா அவங்க கஷ்டம் நமக்குத் தெரியாதா? என்னமோ விசுவாசத்துக்காக இவ்ளவும் செய்தாங்க. எல்லாம் நீ எந்திரிச்சி வந்த பிறகு தாம் ஒழுங்குபடுத்தணும். அன்னிக்கி சங்கர் வந்திருந்தான். இந்தச் சமயத்திலே அவன் உதவியில்லாட்டி, நாம் நாறிப் போயிருப்போம். அவன் தங்கம்னா தங்கம்தான். அவனைக் கொண்டு ஒங்க அப்பா வச்சிட்டுப்போன கணக்கு வழக்கையெல்லாம் பார்க்கச் சொன்னேன். வீடு அந்த மைனர்கிட்டே அடமானத்திலே இருக்கு; நிலம் வாங்கின கடனுக்கே முங்கிப் போச்சி, இன்னும் வேறெ பாக்கி கிடக்கு மிச்சம் ஒண்ணையும் காணம். அந்த மைனர் பொல்லாத மனுசன், அவன் பாக்கியை எப்படியாவது அடைச்சி வீட்டைத் திருப்பணும்.

"கமலா கூட அன்னிக்குவந்து உன்னைப் பாத்துட்டுப் போனதாக, சங்கர் சொன்னான். பாவம், அது அறியாப் பொண்ணு அவ இங்கே வந்தான்னவுடனே ஏன் வந்தான்னு தான் தோணிச்சி. ஊரிலே நாலும் பேசுவாங்க, ஊர் வாயை மூட முடியுமா? அவங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா, புள்ளேன்னு கூடப் பார்க்காம, குழியை வெட்டி இறக்கினாலும் இறக்கிப் போடுவாரு. அவரை உனக்குத் தெரியாதா? நீ.அவளை மறந்திரு.கல்யாணம் கில்யாணம் பண்ணனும்ணு நினைச்சிக்கிட்டு இருக்காதே. மல்லாந்து படுக்க ஆசை கூடாது. சங்கரும் கமலாவும். நமக்கு என்ன பகையான்னு கேப்பே. அதுக ரெண்டும் சின்னஞ்சிறிசு. துணிஞ்சி எதுவும் சொல்லும், அதை நம்பி ஏமாறாதே. வீணா அந்தப் பொண்ணு ஆசையை வளர்த்து அதையும் ஏமாறச் செய்றதை விட, இது மேல்...

"உங்க அப்பா தரமறிஞ்சி கடனைக் கிடனை வாங்கிப் போட்டு யாபாரம் பண்ணாததினாலே தான் நமக்கு இந்தக் கதி நீயாவது புத்தியோடு புழைக்கப் பாரு. உன்னைத் தான் நான் நம்பியிருக்கேன் நம்ம கைதான் நமக்கு உதவும். நாலு வீட்டிலே தூத்திப் பெருக்கிப் புழைச்சாலும் புழைக்