பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202


"மணி, மணி." என்று புலம்பியது. அவர் வாய், அவர் மனம்.

மறுகனமே.அவர் ஆஸ்பத்திரியில் கால் தரிக்காமல் ஒட்டமும் நடையுமாக மணியின் வீட்டை நோக்கி ஓடினார். வழியில் கண்டவர்களையெல்லாம் நிறுத்திவைத்து, "மணி ஐயாவைப் பாத்திங்களா?" என்று கேட்டுக்கொண்டே ஓடினார்.

திடீரென்று அவரெதிரில் எதிர்ப்பட்ட வடிவேலு முதலியார் கோனாரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தார்.

"முதலியாரையா, மணி ஐயாவைக் காணோம். எங்கேயோ போயிட்டாங்க_" என்று சொல்லத் தொடங்கினார்.

அதற்குள் வடிவேலு முதலியார் குறுக்கிட்டு என்னது மணி ஓடிப் போயிட்டானா? சேச்சே என்ன காரியம் செஞ்சிட்டான்? பயந்தாங்கொள்ளி! கவலையும் கஷ்டமும் எல்லாத்துக்கும்தான் இருக்கு. அதுக்காக, இப்படிக் கோழை மாதிரி ஓடிப் போறதாவது? அப்படி ஓடுறதானா, இந்த ஊரிலே ஒருத்தன் பாக்கியிருக்க மாட்டானே." என்று ஏதேதோ பேச முனைந்தார். ஆனால் இருளப்பக் கோனாரோ அவருடைய பேச்சைக் கேட்பதற்காக நிற்கவில்லை. அவர் தம்மால் முடிந்த அளவு வேகத்தோடு ஓடிக் கொண்டிருந்தார்,


19

"ஏன் ஓடி வந்தேன்!"

பொழுது பலபலவென்று விடிந்து கொண்டிருந்தது கீழ்வான மண்டலத்தில் உதயஜோதியின் ஒளிமூட்டம் பனிபோல் படர்ந்து வெளிறத் தொடங்கியது கன்னங்கரிய