பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204


தாய் எல்லோரையும் விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டேன். ஒடுகிறேன். ஆனால் எந்தப் பொறுப்புக்களை, எந்த மனிதர்களை மறந்து விட்டு ஓடிவர நினைத்தேனோ, அந்தப் பொறுப்புக்களை, அந்த மனிதர்களை, என்னால் மறக்க முடியவில்லையே! ஏன்? ஏன்...?"

பளீரென ஒளிவீசிப் பாய்ந்து வந்த காரை செவல் அருகில் ஒரு கை வழிமறித்தது; கார் நின்றதும் கைநீட்டிய பிரயாணி ஏறி அமர்ந்தான்.

-அண்ணே பாளை ஒரு டிக்கட். நம்பர் எம்பத்தொன்பது!"

டிரைவர், 'இன்வாய்ஸை'ப் பதிந்து கொள்ள முனைந்தார். அதற்குள் தூரத்தில் காருக்குப் பின்னால் ஒரு பிளஷர் கார் தன் கொள்ளிக் கண்களை அகலத் திறந்து வைத்தவாறு அசுர வேகத்தில் ஓடி வந்தது.

மணிக்கு நெஞ்சு படபடத்தது. அவன் மனத்தில் திடிரென்று ஒரு பீதி உருவாயிற்று. 'யாரேனும் என்னைத் துரத்திப் படிக்கத்தான் வருகிறார்களோ? ஒரு வேளை சங்கராக இருந்தால் அவனுக்குத் தான் அமர்ந்திருக்கும் கார் சீக்கிரமே ஓடத் தொடங்காதா என்றிருந்தது. பிளஷர் நெருங்க நெருங்க அவன் இதயம் நிலை கொள்ளாது துடித்து அலறியது. நல்ல வேளையாக, அந்தப் பிளஷர் இருளோடு இருளாய், புழுதியை வாரியிறைத்துவிட்டு முன்னேறிச் சென்ற பிறகுதான், மணியின் இதயம் படபடப்பு நீங்கிச் சமனப்படத் தொடங்கியது.

எனினும் மறு கணமே அவன் சிந்தனை திசைமாறிக் கறங்கியது. கார் ஓடத் தொடங்கிவிட்ட போதிலும் அவன் மனத்தில் பீதியின், உறுத்தல் மறையவில்லை. தன்னை யாராரோ, ஏதேதோ உருவமுள்ள மனிதர்களும் உருவிலிகளான பொறுப்புக்களும் பயவுணர்ச்சிகளும் - இடைவிடாது கண் வைத்துத் துரத்திப் பிடிக்க முனைவதுபோல்