பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205


ஒரு பிரமை அவன் மனத்தில் ஏறியமர்ந்து, பேய்க்கனவு போல் அழுத்திக் கொண்டிருந்தது.

"நான் தான் ஓடி வந்து விட்டேனே, என்னை ஏன் இவர்கள் துரத்துகிறார்கள்! என் கூடவே ஏன் ஓடி வருகிறார்கள்? ஏன் அந்தப்பயங்கரப் பொறுப்புணர்ச்சிகள் என்னைத் துரத்தியடிக்கின்றன? ஏன்? ஏன்...?"

அவன் தன் சிந்தனையில் தோன்றும் பய விகாராங்களுக்கு 2.ருப்பிடித்துத் தெளிவுபட முயன்றான்.

"நான் பிறந்த ஊரை, வீட்டை, உற்றவரையெல்லாம் விட்டு ஓடி வருகிறேன். எனினும் என் நெஞ்சைவிட்டு இவையனைத்து ஓடி மறையவில்லையே! அதோ என் தாய் - அதோ கமலா - அதோ சங்கர் - அதோ அம்பாசமுத்திரம் - ஆற்றுப்பாலம் சுதித்தோடும் ஆறு - ஆக்குக் கயிற்றில் அப்பா! - ஏன் இவையெல்லாம் என் மனத்தைவிட்டு மறையவில்லை? அழியவில்லை? அவர்கள் என் நெஞ்சில் விதைத்த எண்ணங்களையெல்லாம் நான் ஏன் இன்னும் மறக்க முடியவில்லை? நான் ஏன் சென்றதையெல்லாம் பழகியவர்களையெல்லாம் மறந்து தலை முழுகிவிட்டு, புது மனிதனாக இன்று பிறந்த பிள்ளைபோல் மாற முடியவில்லை ...? ஏன்...?"

இந்தக் கேள்விக்கெல்லாம் அவனுக்குப் பதில் கிட்ட வில்லை , எனினும் அவன் சிந்தித்தான்; சிந்தித்தான்...

"ஏன் மறக்க முடியவில்லை.?

"அவர்களை நான் மறந்துவிடுவேன். ஆனால் அதற்கு முன் நான் என்னையல்லவா மறக்கவேண்டும் போலிருக்கிறது? என் மனத்தை, என் ஆத்மாவை மறந்துவிட வேண்டும். என் மனம்தானே அந்த நினைவுகளையெல்லாம் இறக்கி வைக்க வழி தெரியாமல் என்னோடு இழுத்துக் கொண்டுவருகிறது!என் ஆத்மாவை மறந்தாலொழிய வேறு கதியே இல்லை...