பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260


மதுரை நகர் நெசவுத் தொழிலாளர் சங்கக் கட்டிடத்தின் முகப்பில் காணப்பட்ட உயரக் கம்பத்தின் உச்சியில் அந்த செங்கொடி, பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. அந்தக் கொடியில் பொறித்துள்ள ம.நெ.ச (மதுரைநகர் நெசவாளர் சங்கம்) என்ற எழுத்துக்கள் நிலையாகத் தெரியாவிட்டாலும், எதிர்க்காற்றில் அலை வீசிப் பறக்கும் அந்தக் கொடியின் துவட்சியில் அவை மின்வெட்டுப்போல் உருக்காட்டின. மேலேறி விட்ட நீலவானத்தில் விரைந்தோடும் மேகக் கூட்டங்களை ஏறிட்டுப் பார்க்கும் போது, அந்த மேகக் கூட்டங்கள் நிலையாக நிற்பது போலவும், காற்றில் படபடக்கும் அந்தக் கொடி மட்டும் எதிர்க்காற்றில் வெகு வேகமாக முன்னேறிச் செல்வது போலவும் ஒரு காட்சிப் பிரம்மை உண்டாயிற்று நிலாவொளியோடு போட்டி போட்டுக்கொண்டு, ஹோட்டல் உச்சியிலுள்ள நியான் விளக்கு அந்தத் துவஜத்தின் மீது ஒளியை அள்ளிச் சொரிந்து கொண்டிருந்தது.

கொடி மரத்துக்கருகே. நாலைந்து நெசவாளி வேழியர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்கு முன்னர் சாப்பிட்ட டீயின் ருசியை அவர்கள் நாக்கு சப்புக் கொட்டிக் கொண்டிருந்தது; டீ குடித்ததனால் ஏற்பட்ட வாயின் மழுமழுப்பைப் போக்குவதற்காக ஓரிருவர் பீடியைப் பற்றவைத்து, ரசித்துக் குடித்துக் கொண்டு நின்றார்கள்.

"அட வாங்கய்யா, உள்ளே போகலாம், சும்மா பீடியைக் குடிச்சிக்கிட்டு! அவர் காத்துக்கிட்டிருப்பாரு' என்று ஒருவர் கடிந்து கொண்டார்.

"பீடிதான் முடியட்டுமே. கொஞ்சம் பொறுமேன்!" என்றார் ஒருபீடி ஆசாமி.

அதற்குள் பீடி குடித்துக் கொண்டிருந்த இன்னொருவர் எங்கே தம்மையும் விரட்டத் தொடங்கிவிடுவார்களோ