பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262


பூதாகாரமாய்க் கவரில் விழுந்து கொண்டிருந்தன. காலடி ஓசை கேட்டதும், மணி தான் சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு ஏறிட்டுப் பார்த்தான்.

அந்த நாலைந்து நெசவாளிகளும் உள்ளே வந்து அங்கிருந்தவர்களோடு உட்கார்ந்து கொண்டார்கள்.

இப்பத்தான் வர்ரதா? இவங்க எல்லோரும் எப்போதே. வந்து விட்டார்கள். தெரியுமா?" என்று சிரித்துக்கொண்டே அந்த நெசவாளிகளைக் செல்லமாகக் கண்டித்தான் மணி.

"டீ சாப்பிட்டு வந்தோம். அதுதான்." "அதுமட்டுமில்லை. இவரு பீடியை வேறெ குடிச்சி."

என்று ஒரு நெசவாளி கூறிக் கொண்டே பக்கத்திலிருந்தவரைக் கண்ணைக் காட்டினார்.

பீடி குடித்த அந்த ஆசாமியோ அந்த நெசவாளியின் தொடையில் வெளிக்குத் தெரியாமல், இடித்து, அவர் பேச்சை 'ஸென்ஸார்' பண்ணினார்;

மணி மெல்லச் சிரித்துக் கொண்டான்; பிறகு அவர்களைப் பார்த்து நட்புரிமையோடு பேசத் தொடங்கினான்:

"சரி.நான் கடைசியாக என்ன சொன்னேன்?"

"மந்திரி கைத்தறியை ஆதரிக்கணும்னு சொன்னது பற்றிச் சொன்னீங்க" என்று பதிலளித்தார் ஒரு நெசவாளி.

எண்ணெய் வற்றியதால் கரண்டு கொண்டு போகும் விளக்கொளியைத் தூண்டி வைத்துவிட்டு, மணி கண்களைத் தன் முன்னிருந்த குறிப்புக்களின் பக்கம் திருப்பினான்; குறிப்புக்களை ஒரு முறை பார்த்துவிட்டு, அவர்களை நோக்கிப் பேசத்தொடங்கினான்:

"இன்று ஆட்சியாளர்கள் கைத்தறித் துணியை வாங்கி ஆதரியுங்கள் என்கிறார்கள். ஆனால் ஜனங்கள் கையிலோ