பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

267


என்னிடம் என்னென்னவோ சொன்னான், அந்த வார்த்தைகள் எனக்குப் புதிராக இருந்தன, சொப்பன வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு, பிரத்தியட்ச உண்மைகள் எப்படிப் புரியும்? புரியாதுதான். ஆனால், நான் பிரத்தியட்ச வாழ்வின் குரூர வசீகரங்களை நேரில் அனுபவ பூர்வமாக அறிந்த போதோ? அந்த வாழ்க்கையும் எனக்குப் புதிராகவேதான் இருந்த்து! வாழ்வின் சிரமங்களையும், சிக்கல்களையும் என் மனத்தின் சொப்பனக் கருத்துக்களைக் கொண்டுதானே அளவிட முயன்றேன்!வாழ்வின் ரகசியங்களை அளந்தறிய முடியாது தவித்துத் தெருவில் நின்ற என் கண்களைத் திறந்து விட்டவரல்லவா, ராஜு பிரத்தியட்ச வாழ்வை, பிரத்தியட்ச உண்மைகளைக் கொண்டுதான் அளவிட. வேண்டும் என்று எனக்கு உணர்த்திய ஞானாசிரியரல்லவா ராஜு

அர்த்த சாம இருளின் அந்தகாரத்திலே வாழ்வின் ரகசியங்களைப் பற்றிய தத்துவ விசாரத்தில் ஈடுபட்டு, தன்னை மறந்திருந்தான் மணி.

"மணி, மணி!" என்று திடீர்க் குரல் கேட்டு விழித்தெழுந்தான் அவன்.

எதிரே ராஜு நின்றுகொண்டிருந்தார்.

"என்னமணி, அதற்குள்ளே தூங்கியாச்சா?"

"இல்லை, ராஜு உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்."

"சரி, தூக்கம் வந்தால் தூங்குங்கள். நாளை முதல் நமக்கு இரண்டு மூன்று நாளைக்கு ஓயாத வேலையிருக்கிறது."

"என்ன வேலை? புதிதாக ஏதாவது பிரச்னை கிளம்பி யிருக்கிறதா?"

"ஒன்றுமில்லை. சேலம், சின்னாளப்பட்டி முதலிய