பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

287


"இது எங்கே கிடந்தது கொஞ்ச நாளைக்கு முன்னால், நான் இதைத் தேடித் தேடிப் பார்த்துவிட்டு, தொலைந்து போயிற்று என்றல்லவா முடிவு கட்டிவிட்டேன்!" என்று சாவதானமாகச் சொன்னார் ராஜு,

"சரி உங்கள் பேர் வீரையாதானே? இவர்கள்தானே உங்கள் பெற்றோர்?"

"ஆமாம்."

மணிக்குக் குதுாகலம் தாங்க முடியவில்லை. அவன் ராஜுவை உட்கார வைத்து, தான் அறிந்து கொண்ட சகல விவரங்களையும் இருளப்பக் கோனாரைப் பற்றிய செய்திகளையும் கூறினான். அதைக் கேட்ட ராஜூ பிரம்மிப்பு அடைந்தார்.

"அப்படியானால், என் பெற்றோர்கள் உயிரோடிருக் கிறார்களா?"

"ஆமாம். உங்களைப்பற்றி அவர்கள் நினைத்து வருந்தாத நாள் இல்லை. அது சரி நீங்கள் ஏன் அவர்களுக்கு ஒரு கடுதாசி கூடப் போடலை?"

'போட்டேன் மதுரைக்கு வந்து வேலைக்கு அமர்ந்த பிறகு ஒரு கடிதம் போட்டேன் விலாசதார் இல்லை என்று திரும்பி வந்து விட்டது. அதிலிருந்து அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாது. இந்தப் படம் ஒன்றுதான் அவர்கள் ஞாபகார்த்தமாக என்னிடம் இருக்குது. இது அவர்கள் எப்போதோ சங்கரன் கோயில் தவசித் திருநாளுக்குப் போயிருந்த போது எடுத்த படம்."

"சரி, நீங்கள் இத்தனை நாளும் என்னிடம் உங்கள் வரலாறு பற்றி என் சொல்லவில்லை? கடைசியில் நானாகத் தானே உங்களைக் கண்டுபிடித்தேன்!" என்று பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டான் மணி