பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41



"யார் வயித்திலே யார் அடிக்கிறா? வேலைக்குத்தான் கூலியா? விருதாக்கூலியா?"மைனர்வாளின் குரல் மண்டபக் காலில் முட்டி மோதி எதிரொலித்தது.

சுமார் அரைமணிநேர வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு இரு சாராருக்கும் பொதுவாக ஒரு முடிவு செய்யப்பட்டது. தறிகாரர்களுக்கு அப்போது கழிக்கு எட்டணா கூலிதான் கிடைத்து வந்தது. குறைந்தபட்சம் பன்னிரண்டணா வேண்டும் என்பது தறிகாரர்களின் கோரிக்கை. கடைசியில் பெரும்பான்மையான வியாபாரிகளின் அபிப்பிராயப்படி கழிக்குப் பத்தணாக் கூலி என்று 'தென்காசி வழக்' காகக் கூலி நிர்ணயம் செய்யப்பட்டது.இந்த நிர்ணயிப்புக்கு வருவதற்கே கைலாச முதலியாரையொத்த சிறு வியாபாரிகள் பலரும் வெகு நேரம் வாதாட வேண்டியிருந்தது. பிறகு இந்த முடிவைத் தெரிவிப்பதற்காகத் தறிகாரர்கள் உள்ளே வரவழைக்கப்பட்டார்கள்.

முடிவு தெரிவிக்கப்பட்டது; தறிகாரர்களும் சம்மதித்துக் கொண்டார்கள்.

"அப்போ விஷயம் முடிஞ்சிது. கூட்டத்தைக் கலைச் சிரலாமா?" என்று கேட்டுக்கொண்டே இடத்தை விட்டு எழுந்திருக்க முனைந்தார் மைனர் முதலியார்,

உடனே ஒரு வியாபாரி குறுக்கிட்டு, "இருங்க அவசரப்படுதியளே!" என்று இடைமறித்துக் கூறி அவரைக் கையமர்த்தி உட்கார வைத்தார். இதற்குள் வடிவேலு முதலியார். "முதலாளி, நம்ம அம்மன் கோயில் தர்மகர்த்தா விசயமா ஒரு முடிவு பண்ணனும்னு பல பேருக்கு எண்ணம் அதையும் இங்கேயே " என்று ஆரம்பித்தார். அவரை ஆமோதித்தார் ஒரு சிறு வியாபாரி,

தறிகாரர்களும் வியாபாரிகளும் பொருளாதார அந்தஸ்தில் வேறுபாடு உடையவர்களானாலும், ஊர்ப் பொதுக் காரியங்களில் சமூகத்தினர். அனைவருக்குமே சரிசமானமான வாக்குரிமை உண்டு. மேலும் அன்று