பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


தறிநெசவாளிகள் பலர் வந்திருந்தார்கள். எனவே தர்மகர்த்தாப் பிரச்சினை தவிர்க்க முடியாததாகி விட்டது. எனிலும் தாதுலிங்க முதலியார் தமது அதிகார தோரணையைப் பிரயோகிக்கத் தயங்கவில்லை.

“என்னய்யாயோசனை? அருணாசலமுதலியார்வாள் தான் தர்மகர்த்தாவா இருக்காகளே, அவாளே இருந்துட்டுப் போகட்டுமே. எல்லாம் நிலைமை சீர்ப்பட்டு வந்த பிறகு பாத்துக்கிடலாம்” என்று அடித்துப் பேசினார்.

"மைனர் வாளை நான் குத்தம் சொல்ல வரலை. ஊர்ப் பொல்லாப்பு. நாலுபேர் நாலுவிதமாப் பேசுதாங்க. பொறுப்பைக் கைமாத்திக் குடுத்திட்டா, ஒரு வம்பு தும்பு இல்லை" என்று வடிவேலு முதலியாரை ஆதரித்த சிறு வியாபாரி அழுத்திப் பேசினார்.

இதைக் கேட்டதும் கூட்டத்தில் நின்ற சுப்பையா முதலியார், “அது என்ன அது? அண்ணாச்சியையும் கூட்டத்திலே வச்சிக்கிட்டு இப்படி அவமரியாதையாப் பேசுறதாவது?” என்று கண்டனக் குரல் எழுப்பி, தமது குடும்ப விசுவாசத்தை நிலைநாட்டிக் கொண்டார்.

“ஊர்க் காரியமின்னா நல்லதும் வரும்; பொல்லதும் வரும். நாலும் பொறுத்துத்தான் போகணும். கோவிச்சுக் கிட்டா முடியுமா?” என்று சூடாகப் பதில் அளித்தார் வடிவேலு முதலியார்.

கடைசியில் தறிகாரர்கள் அபிப்பிராயப்படியே தர்மகர்த்தா பிரச்சினை 'அஜண்டா'வில் இடம் பெற்றது. பெரிய முதலாளியும் மைனர்வாளும் கிளப்பிய ஆஷேபணைகள் ஒன்றும் நிலைக்கவில்லை. முடிவாக வடிவேலு முதலியாரின் திட்டமே நிறைவேறியது. பெரும்பான்மை யோரின் ஆதரவின் மூலம் கைலாச முதலியார் அம்மன் கோயிலின் புதிய தர்மகர்த்தாவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். புதிய தர்மகர்த்தாவிடம் கோயில் கணக்கு வழக்குகளை யெல்லாம் அருணாசல முதலியார் கூடிய