பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


 மேலை வானத்தில் சுக்கில பட்சத்துப் பிறைப் பிள்ளை தத்தித் தவழ்ந்து மேலேறி ஒளிபெற்றுத் துலங்கத் தொடங்கியது; சந்திர கலையின் மங்கிய ஒளி மூட்டத்திலே அம்பாசமுத்திரம் தகரம் தெளிவற்ற சொப்பனம் போல் மங்கலாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ரோட்டுப் பாதையில் ஆளரவம் அடங்கி மோனசமாதி குடியேறிக் கொண்டிருந்தது.

ஹாயாக ஒரு ஹிந்துஸ்தானி மெட்டைச் சீட்டியடித்துக் கொண்டு வந்த ஒரு மாணவன் திடீரென்று தன் சங்கீதத்தை அந்தரத்திலே விட்டுவிட்டுப் பேசத் தொடங்கினான்.

"என்னப்பா, சங்கரின் பேச்சைப் பார்த்தியா? அவன் எதை எடுத்தாலும் அரசியல் கண் கொண்டுதாம்பா பார்ப்பான்!"

உடனே பக்கத்தில் வந்த மாணவன் ஒருவன், "அவன் எதைப் பத்தின்னாலும் அழகாக விவாதம் செய்கிறான். ஆனா அவன் என்னமோ கம்யூனிஸ்ட் அனுதாபியாமே கேள்விப்பட்டேன்" என்று ஆரம்பித்தான்.

"கம்யூனிஸ்டோ, சோஷியலிஸ்டோ? அவன் சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது! சும்மா பொய்யா சொல்றான்? காலேஜிலே அவன் பேசுகிறான் என்றால், எவ்வளவு கூட்டம் கூடுகிறது? இல்லாட்டி, இந்த வருஷம் கல்லூரித் தமிழ்ச் சங்கத் தேர்தலிலே, அவன் அத்தனை மெஜாரிட்டி ஓட்டு வாங்கி ஜெயித்திருப்பானா? நாமெல்லாம் பள்ளிக்கூடப் புத்தகங்களே பரமபதம் என்று கிடக்கிறோம். அவனுக்கு உலக ஞானம் எவ்வளவு இருக்கிறது, தெரியுமா?" என்று சங்கரின் பெருமையை உற்சாகத்தோடு கூற முயன்றான் வேறொருவன்.

"அவன் மட்டும் என்ன? அவன் தங்கச்சி கமலா இருக்கிறாளே,அவள் கூட அப்படித்தான். நம்பகாலேஜிலே 'இண்டர் காலேஜியேட்' பேச்சுப் போட்டி நடந்ததே.