பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆசையால் நேர்ந்த அழிவு

107

களையும் சிறகுகளையும் கழுகுப் பொந்தின் எதிரிலே போட்டு வைத்திருந்தது. அந்த எலும்புகளையும் சிறகுகளையும் கண்ட பறவைகள், கழுகுதான் தங்கள் குஞ்சுகளைக் கொன்று தின்றுவிட்டது என்று நினைத்துக் கோபம் கொண்டன. எல்லாமாகக் கூடி அந்தக் கிழட்டுக் கழுகைக் கொத்திக் கொத்திக் கொன்று விட்டன.

குணம் தெரியாமல் யாருக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பது இதனால் நன்கு விளங்குகிறது.



5. ஆசையால் நேர்ந்த அழிவு

ஒரு வேடன் காட்டுக்கு வேட்டைக்குப் போய்,ஒன்றும் கிடைக்காமல் பல நாள் அலைந்து திரிந்து