பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.பூனைக்கு இடம் கொடுத்து மாண்ட கழுகு

127

காக அரசன், சிரஞ்சீவியைப் பகைவர்களிடையே இருந்து செயலாற்றியது குறித்துப் பலவாறாகப் புகழ்ந்துரைத்தது.

மேகவண்ணனுடைய புகழுரைகளை யாற்றாமல் சிரஞ்சீவி இவ்வாறு கூறியது.

‘அரசே, அருமையான தம்பிமார்களையும், அளவில் அடங்காத சேனைகளையும் கொண்டு ஒப்பில்லாத அரசாட்சி செய்து உலகாண்ட தருமராசன் கூட, துறவி வேடங்கொண்டு விராடனிடம் இருக்கும்படி நேர்ந்ததில்லையா?

‘தன் தோள்வலியால் பெரும்புகழுடன் வாழ்ந்த மாவீரனான வீமன் கூடத் தன் பழிப்புக்குரிய பகை யரசனிடம் போய் அடுக்களைச் சமையல்காரனாக இருக்கும்படி நேர்ந்ததில்லையா?

'விஜயன் என்ற புகழ்ப் பெயர் பெற்ற அர்ச்சுனனே நாடகப் பெண்களுக்கு நட்டுவனாராகச் சிகண்டி என்ற பெயரில் இருக்கும்படி நேர்ந்த தில்லையா?

'நகுலன், விராடனிடம் குதிரைக்காரனாகச் சேர்ந்து வாழ நேர்ந்ததில்லையா? சகாதேவன் மாடு மேய்ப்பவனாக நேர்ந்ததில்லையா?

நெருப்பில் பிறந்த சிறப்பினையுடையவளும், சூரிய குலத்தில் பிறந்து சந்திர குலத்தில் புகுந்த மின்னல் கொடி யொத்தவளும் ஆகிய பாஞ்சாலி,