பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

பஞ்ச தந்திரக் கதைகள்

தவளைகளைப் போலவும், என்னிடம் ஏமாந்த கோட்டான்களைப் போலவும் கூட்டத்தோடு ஒழிய வேண்டியதுதான்’ என்று சிரஞ்சீவி சொல்லிற்று.

அதை ஒப்பி காக அரசன் மேகவண்ணன் 'நல்ல அறிவினாலும், பொறுமையினாலும், திறமையினாலும் எச்செயலும் வெற்றியாய் முடிவது போல, சேனைகளாலும், செல்வத்தாலும், கோபத்தாலும், மான உணர்ச்சியாலும், மனோ சக்தியாலும் கூட முடிவதில்லை'. என்று சொல்லியது.

அதன் பின் பல்வகையான சூழ்ச்சிகளிலும் தந்திரங்களிலும் வல்லமையுடையதான சிரஞ்சீவியுடனும், மற்ற அமைச்சர்களுடனும், தன் காக்கை இனத்துடன், திரும்பவும் முன்னிருந்த பழைய ஆல மரத்தை அடைந்து மேகவண்ணன் பல ஆண்டுகள் நலமாக வாழ்ந்தது.



2. தன் வாயினால் கெட்ட கழுதை

ஒரு வண்ணான் பொதி கழுதை யொன்றை வளர்த்து வந்தான். அவன் தன் அழுக்கு மூட்டைகளை யெல்லாம் அதன்மேல் ஏற்றிக் குளத்திற்குக் கொண்டு போவான். துவைத்து முடிந்த பின் மீண்டும் சுமை ஏற்றிக் கொண்டு வருவான்.

இவ்வளவு உழைக்கின்ற அந்தக் கழுதைக்கு அவன் தீனி வைப்பதில்லை, ஆனால், கழுதையின்