பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பஞ்ச தந்திரக் கதைகள்
பகுதி 4
1. கிடைத்த குரங்கைக் கைவிட்ட முதலை

ஓர் ஆற்றங்கரையில் ஒரு குரங்கு இருந்தது. அந்தக் குரங்கு ஒரு நாள் பழம் பறித்து உண்பதற்காக ஆற்றின் ஒரத்தில் இருந்த ஒரு மரத்தின் மேல் ஏறியது. அது பழம் பறித்துத் தின்று கொண்டிருக்கும் போது கை தவறிச் சில பழங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. அம்படி அவை விழுந்த போது கள கள வென்ற ஓசை உண்டாயிற்று. அது ஒரு வேடிக்கையாகத் தோன்றவே, அந்தக் குரங்கு ஒவ்வொரு கிளையாகத் தாவி மரத்தில் இருந்த பழங்களை உதிர்த்து விட்டுக் கொண்டிருந்தது. அப்போது முதலையரசன் அந்தப் பக்கமாக வந்தது. அது மரத்திலிருந்து உதிர்ந்த பழங்களைத் தின்றது. அந்தப் பழங்கள் மிகச் சுவையாக இருந்தபடியால் அது அந்த இடத்திலேயே நின்று விட்டது. குரங்கைப் பார்த்து அந்த முதலை, "நண்பனே,