பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

பஞ்சதந்திரக் கதைகள்


சொல்லி அந்தச் சிங்கக் குட்டிகளுடன் நரிக்குட்டி சச்சரவிட்டது.

இருப்பிடத்திற்குத் திரும்பிவரும் வரையும், வந்த பின்னும் அவை சச்சரவிட்டுக் கொண்டே இருந்தன.

இதைக் கவனித்த பெண் சிங்கம், நரிக்குட்டியைத் தனியே அழைத்து,

"நீ உன்னை ஒரு சிங்கம் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறாய். உண்மை யதுவல்ல. நீ ஒரு நரிக்குட்டி. அறிவறியாத என் குட்டிகளோடு சேர்த்து நான் உன்னை வளர்த்தேன். அவைகளும் உன்னை ஒரு வகையான சிங்கம் என்றே எண்ணிக் கொண்டுள்ளன- உன் பிறப்புத் தெரிந்தால் அவை சீறும் ஆகையால் அவை தெரிந்து கொள்வதற்கு முன் ஓடி விடு" என்று கூறியது. உடனே அங்கிருந்து அந்த நரிக்குட்டி ஓடி விட்டது.


6. குருவிக் கூட்டைக் கலைத்த குரங்கு

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் பெரும் மழை பெய்தது. அந்த மழையில் நனைந்து குளிரினால் ‘ பற்கள். கிட்டிப்