பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.தங்களால் தாங்களே கேட்டோர்

37


ஆஷாடபூதி சாமியாரிடம் வந்து, அவன் காலில் விழுந்து வணங்கினான். தனக்குத் திருமணமாக வில்லை என்றும், தன்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டு, நல்ல வழி காட்ட வேண்டும் என்றும் வேண்டினான். தேவசன்மாவும் அவனைத் தன் சீட னாக ஏற்றுக் கொண்டான். ஆஷாடபூதியும் மிகவும் நல்லவன் போல் சாமியாருக்குப் பணிவிடைகள் செய்து வந்தான்.

இப்படியிருந்து வரும் நாளில் ஒரு நாள், ஓர் அந்தணன் இவர்களுக்கு விருந்து வைத்தான். விருந் துண்டுவிட்டுப் புறப்பட்ட அவர்கள் நெடுந்துாரம் சென்ற பிறகு, ஆஷாடபூதி தன் தலையில் கிடந்த ஒரு துரும்பைக் காட்டி, 'சுவாமி, நமக்குச் சோறு போட்ட அந்தணன் வீட்டிலிருந்து இந்தத் துரும்பு என்னையும் அறியாமல் ஒட்டிக் கொண்டு வந்து விட்டது. உணவளித்தவன் வீட்டுப் பொருளை ஒரு துரும்பானாலும் எடுத்து வரலாமா? இதோ நான் ஒடிப்போய் இதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன்’ என்று ஓடினான். சிறிது தூரம் சென்று ஒரு மறைவான இடத்தில் நெடு நேரம் உட்கார்ந் திருந்துவிட்டு அவன் திரும்பி வந்தான்.

இந் நிகழ்ச்சிக்குப் பிறகு, தேவசன்மாவுக்கு தன் சீடன் மேல் நம்பிக்கை அதிகமாகியது.

ஒரு நாள் சாமியாரும் சீடனும் ஒரு குளக் கரையை அடைந்தார்கள். குளத்தில் இறங்கிக் கால்