36
வந்தவை தனித்தனிக் கண்டங்களாக விளங்குகின்றன.
பசிபிக் கடலில் சில இடங்களில் கடலுக்குள் ஏற்படும் அழுத்தத்தினால் புதிய தீவுகள் தோன்றுகின்றன. தீவுகள் என்பது-கடலில் அமிழ்ந்திருக்கும் மலைகள். கடல் நீருக்கு மேல் உந்தப்பட்டுவிடும்போது அவைகள் தீவுகளாக அங்கே நிலைக்கின்றன.
இப்போது இமயமலை இருக்கும் இடத்தில் முன்பு கடல் இருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இது சாத்தியமே.
மிகப் பெரிய எவரெஸ்ட் மலையின் உயரம் 29000 அடி. ஆனால், இதைவிட 316000 அடி ஆழமான கடல் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் விழுந்தால் இமயமலை மறைந்து விடும்.
இத்தகைய மாறுதல்கள் மெல்ல மெல்ல ஏதோ ஒரு வகையில் பூமியில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை வெளிப்பட பல ஆயிரம் ஆண்டுகளாகின்றன.
நிலக்கரியின் கதையும் இப்படித்தான்.
மலைகள் ஆழ்கடலுக்குள் புதைவதும்; கடலுக்குள்ளிருந்து புதிய மலைகள் வெளியே உந்தப் பட்டுத் தீவுகளாக விளங்குவதோ போல-