உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

மின்சாரத்தை எரிபொருளாக எல்லோராலும் பயன்படுத்த முடியாது. அது விலை மிகுந்த எரிபொருள் வசதி படைத்த நாடுகளில் கூட-ஓரளவுக்குத்தான் அதை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். மண்ணெண்ணை மக்களுக்குப் பயன்படுகிற ஒரு முக்கியமான எரிபொருள். ஆனால் எண்ணைக் கிணறுகள் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. அரேபிய நாடுகளில் தான், பெருமளவு எண்ணை ஊற்றுக்கள் உள்ளன.

அங்கிருந்து இதர நாடுகளுக்கு எண்ணை இறக்குமதி ஆவதால், எண்ணை விலை அதிகமே. பாரத நாட்டில் தேவைக்கு ஏற்ப எண்ணை ஊறறுக்கள் இல்லாததால்- இறக்குமதியாகிற எண்ணை மலிவாக இல்லை. முன்றாவது எரி பொருளாகப் பயன்படுவது தான் நிலக்கரி,மின்சாரம், எண்ணை. இவற்றைவிட நிலக்கரி மலிவானது.

எனவே, இந்திய நாட்டில் பல இடங்களிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களை, படிப்படியாக அரசு தேசிய உடமையாக்கி, மக்களுக்கு அதிக அளவிற்கு நிலக்கரியை உதவி வருகிறது.

வளர்ந்து வரும் மனித நாகரிகத்திற்கு காடு, மலைகளைப் போலவே நதிகளின் பங்கும் மகக்தானது.