பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.அக்கினி புத்திரன் சொன்ன
நெருப்பின் கதை

"நேற்று கங்காதரன் சொன்ன கதை உங்களுக்கெல்லாம் பிடித்திருந்ததா?’ என்று கேட்டுக் கொண்டே உலகநாதன் தன் சகோதரர்களுடன் அந்தக் கிராமத்துச் சிறுவர்கள் மத்தியில் அமர்ந்தான்.

"ரொம்பப் பிடிச்சிருந்தது அண்ணா," என்று அனைவரும் சேர்ந்தாற்போல் கூறினார்கள்.

"மழையைப் பார்த்திருக்கோம்; மழையிலே நனைஞ்சுக்கிட்டே விளையாடிக்கூட இருக்கோம். மழை ஆகாசத்திலேருந்து கொட்டுதுன்னு மட்டும் தான் எங்களுக்குத் தெரியும். ஆனா ஏன் கொட்டுது, எப்படிக் கொட்டுது; எதுக்காகக் கொட்டுது என்கிறதையெல்லாம் அண்ணன் விளக்கிச் சொல்லிட்டிருந்தப்போ, ஜலதோஷமே பிடிச்சிட்டாப்பிலே இருந்துச்சு" என்று மாடசாமி வேடிக்கையாகக் கூறியபோது அனைவரும் சேர்ந்து சிரித்தனர்.