பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

"தண்ணின்னா - எங்க கிராமத்து கண்ணாத்தா ஏரிதான் பெரிசுன்னு எண்ணிக்கிட்டிருந்த எங்களை; கண்டம் கண்டமா அழைச்சிட்டுப் போய் எத்தனை பெரிய பெரிய சமுத்திரங்களையும், நம்ம நாட்டிலே உள்ள எவ்வளவு அணைக்கட்டுக்களையும் காட்டிட்டீங்க. அது மட்டுமில்லே-

தண்ணிரோடு அருமை பெருமைகளையும்; அது சுத்தமா இல்லேன்னா மக்கள் எத்தனை கஷ்டப்படு வாங்கன்னும் தெரிஞ்சுக்கிட்டப்போ; எனக்கு எங்க கிராமத்து ஜனங்க மேலே கோவம் கோவமா வருது...” என்று அழகப்பன் கூறிக் கொண்டு வரும்போதே, "ஏன் தம்பி அப்படி?” என்று ஆதரவோடு கேட்டான் உலகநாதன்.

"ஆமாம் அண்ணா! கண்ணாத்தா ஏரித்தண்ணி கல்கண்டு ஆட்டமா இனிப்பா சுத்தமா இருக்கும். எங்க கிராமத்து ஜனங்களுக்கெல்லாம் குடி தண்ணி கொடுத்து உதவறது இந்த ஏரிதான். ஆனா...அந்த ஏரியிலே தான் எல்லாரும் குளிப்பாங்க-வீட்டிலே இருக்கிற அழுக்குத் துணிகளையெல்லாம் கொண்டுவந்து போட்டு தோச்சுக்குவாங்க-

வடக்குக் கரைப் பக்கம் போனா ஒரே ஆடுமாடுதான். எங்க கிராமத்து வயல்லே உழற்ற அத்தனை சாணி மாடுகளையும்; வைக்கோலையும்