பக்கம்:படித்தவள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 101 "தே உன்னைத் தான்” என்றேன். “என்ன அத்தான்" என்றாள். "தே ஹல்லோ என்பதை விட அத்தான் என்பது ரொம்பவும் பிரியமான சொல்லாக இருக்கிறது. இதை அவளுக்குச் சொல்லிக் கொடு” என்றேன். "உனக்குத் தெரியுமா இந்தக் கல்லூரிப் பெண்கள் திருக்குறளையே மாற்றிச் சொல்கிறார்களாம். "அறத்தான் வருவது இன்பம்' என்பதை மாற்றி அத்தான் வருவதே இன்பம் என்று சொல்லிச் சிலுக்கு மொழி பேசுகிறார்களாம்" என்றான். "றகரம் வல்லினம்; அதனால் அதை விட்டு விட்டு இருக்கிறார்கள்" என்றேன். "காரனம் ?” "அவர்கள் மெல்லினம்" என்றேன். அவனிடம் என் பிரச்சனையை எடுத்துக் கூறினேன். "கம்மினாட்டி என்றால் என்ன? இது என்னுடைய பிரச்சனை" என்றேன். "யாராவது உன்னை அப்படி அழைத்தார்களா?” என்றான். "அழைத்திருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது; அவனைப் பிடி பிடி என்று பிடித்து உலுக்கி மரியாதையா இந்தச் சொல்லுக்குப் பொருள் சொல்லிவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/103&oldid=802379" இலிருந்து மீள்விக்கப்பட்டது