பக்கம்:படித்தவள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 tाdf சிலம்பிட்டு நடந்து சென்று விட்டது. அது விட்டுச் சென்ற செருப்பு. அதை விரும்பி எடுத்து முத்தமிட்டுக் கண்ணிரால் குளிப்பாட்டினாள். அவன் அவனைக் கண்டித்து இருந்தால் அவள் ஆறி இருந்திருப்பாள். அழகிய மகளும் பழகக் கிடைக்கவில்லை. சூடு தணிவதற்கு வழி இல்லாமல் போய்விட்டது. பீட்டர்ஸ் பர்க் ரயில் நிலையத்தில் நிற்கிறாள்; மனிதர்கள் சுருசுருப்பாக இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள் மூட்டை முடிச்சுகளைத் தயாராக எடுத்து வைக்கிறார்கள்; வண்டியில் ஏறுவதற்கு தனக்கு வேண்டியவர்கள் வருகைக்காகப் பூச் செண்டு தாங்கி நிற்கிறார்கள். மற்றவர்கள் வண்டியில் வருபவர்களுக்காகக் காத்து நிற்கின்றனர். இவள் ஒருத்தி மட்டும் தான் வண்டிக்காகக் காத்து நின்றாள். பெருமூச்சு விட்டுக் கொண்டு பேரிரைச்சலோடு வந்த பெரிய இயந்திர உருளைகள் உருளும் தண்டவாளத்தில் பாய்கிறாள். ரயில்வண்டி நிலையம் புகுகிறது. அவள் திசுக்கள் பிசுபிசுத்துக் கிசுகிசுத்தன: அவள் அங்கங்கள் ஒருகாலத்தில் தங்கம்போல் தளதளத்து ஒளி செய்தன; இன்று பங்கப்பட்டுப் பல துண்டுகளாகச் சிதைந்தன; அவளுக்காக அவள் குருதி மட்டும் சோகத்தைக் கக்கிக் காட்டியது. இந்தக் கதை உலக மகா காவியம் ஆகிவிட்டது, ஒரு சிறந்த கலைஞன் தீட்டியதால். சின்ன வயதில் நான் கண்ட காட்சி நிகழ்ச்சி இன்று உலக மகா கதை ஆகவில்லை; அதை எந்தப் பேனாவும் எடுத்து எழுதவில்லை; அவர்களுக்கு இது புதுமையாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/118&oldid=802411" இலிருந்து மீள்விக்கப்பட்டது