பக்கம்:படித்தவள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 117 படவில்லை; என் பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு; அது மிஞ்சிக் கிடக்கிறது: மகாகவிஞன் படைத்த பாத்திரம். கரீனா கணவன் அவளைப் பற்றிச் சிறிதும் அக்கரை காட்டவில்லை. அது அவள் தவறு என்று சுட்டவும் இல்லை; மன்னித்தேன் என்று இரக்கமும் காட்டவில்லை. மனைவி, ஒருவனின் உடைமை அல்ல; அவளைத் தொடும் உரிமை உண்டே தவிரக் கண்டிக்கும் உரிமை தனக்கு இருப்பதாகக் கருதவில்லை. சாவது அவள் உரிமை; அதைத் தடுக்கத் தான் யார் என்று விலகி நின்றான். இவளை விட்டுவைத்தால் தொடர்ந்து சோரம் போவாள். இவளைப் பிறன் ஒரம் கட்டுவான். காலம் காலமாகப் பழகிப் போன உடைமை / பற்றி அவளைக் கொலை செய்யும் அதிகாரம் தனக்கு இருக்கிறது என்று நம்புகிறான். பையன் தவறு செய்தால் தந்தை அடித்துத் திருத்துகிறார்; இதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கொன்ல செய்தான்; அவன் செயல் அந்த வட்டாரம் முழுவதும் பேசப்பட்டது. இந்தக் கொலையை அவன் செய்தது நியாயமா? ೨15, அவசியமா? அவள் அவன் உடைமையா? அவன் இழந்தது என்ன? "மானம்' என்பது பெருமை: அது தாழ்ந்து விட்டால் உயிர் வாழாமை என்பர் வள்ளுவர். அது அவள் சொந்தப் பிரச்சனை: அதில் இவன் தலையிட்டது சரியா? இது மூன்றாவது வினா? - உண்மையில் ஆயிரம் தலைவாங்கிய சிந்தாமணியின் நிலையை நான் அடைந்து விட்டேன். ஒன்று மொழி வழக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/119&oldid=802413" இலிருந்து மீள்விக்கப்பட்டது