பக்கம்:படித்தவள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 णाठ பற்றியது: மற்றொன்று தெரிந்த சொல்தான் என்றாலும் பொருள் விளக்கம் கிடைக்கவில்லை. மூன்றாவது பட்டால் தான் தெரியும் அது வரை இதற்குப் பதில் கூற'முடியாது. எந்தப் பெண்ணையும் கெடுக்கும் வாய்ப்பு ஏற்படாமல் போய்விட்டது. காரணம் அவசரப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டேன். என்னைப் போல் துர்பாக்கியம் பலருக்கு உண்டு. அவர்கள் பின்னால் சரிப்படுத்திக் கொள்கிறார்கள். பார்க்கலாம். சொல்ல முடியாது; தப்பித்துக் கொண்டேன் என்று எப்படிச் சொல்ல முடியும். 7 என் மனைவிக்கும் எனக்கும் எப்படியோ நெருக்கம் குறைய ஆரம்பித்தது. நான் பொத்தானை எப்படி மாட்டினாலும் அதைப் பற்றி அவள் கண்டிப்பதை நிறுத்திக் கொண்டாள். என்னைத் திருத்த முடியாது என்பதனாலேயா அவள் பார்வை மாறிவிட்டது என்பதனாலேயா தெரியவில்லை. - நான் சந்தோஷமாகப் பொழுது போவதற்கு என் மனைவியைவிட ஆன்ந்தனே எனக்குத் தேவைப்பட்டான். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று விட்டு விடுகிறார்கள். சனியன்! அது சில சமயம் மிக மெதுவாக நகர்வதைக் கண்டால் எரிச்சல்தான் ஏற்படுகிறது. அவளுக்கு என்ன ஞாயிறு ஆனாலும் ஒன்றுதான்; வெள்ளிக்கிழமை ஆனாலும் ஒன்றுதான்; அதே அடுப்புதான்; அதே சமையல்தான்; ஒரு நாளும் அவள் முழு விடுதலை எடுக்க முடியாது இறுமாப்பு. கண்வன் மனைவி என்ன உறவோ படுபோர், நாங்கள் பேசுவதற்கு என்ன இருக்கிறது யோகிகள் அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/120&oldid=802417" இலிருந்து மீள்விக்கப்பட்டது