பக்கம்:படித்தவள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 119 வாழ்க்கை அதைவிடப் படுபோர்; அவர்கள் தம்மைப் பற்றியே எண்ணித் தியானத்தில் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள்? அவள் என் வீட்டைத் தட்டுவாள்; நான் அவள் வீட்டைத் தட்டுவேன்; கொஞ்சம் பேச்சு செல்லும்; அதற்கப்புறம். வீடு என்றாலே யாராவது வரவேண்டும் போகவேண்டும்; அவர்கள்.டம் நம்மைப்பற்றிப் பேசமுடியும். அவர்களைப்பற்றி நாம் சில் கேட்கலாம். அதுவும் ஆனந்தன் எல்.கே.ஜி. ரைம்கள் நிறையக் கற்று வருவான் ஏதாவது கேட்டால் அழகாக ஒப்புவிப்பான்; அவன் வரும் நேரம் ஒன்பது; அதுவும் வந்து விட்டது. அவனும் உள்ளே நுழைந்துவிட்டான். புதுமாப்பிள்ளை கூடுதல் கவர்ச்சி. வரும்போதே தன் மனைவி ஷோபனாவின் பிரலாபத்தைக் கூறாமல் இருக்கமாட்டான். தாங்கள் இருவரும் காதற்பறவைகள் என்று ஒதுவதை விடமாட்டான். "இன்று என்ன உறுதி செய்து விட்டு வந்தாய். மூன்றுக்குமேல் இட்டிலி தின்பதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டு வந்தாயா?" என்று கேட்டேன். "ஒன்றுக்கு மேல் இரண்டாவது தொடுவது இல்லை; என்று வாக்கு அளித்துவிட்டேன்" என்றான். "ஒன்று யார்? "அது என் மனைவி சோபனா! "புதுசு; அப்படித்தான் இருக்கும் மவுசு" "இன்னொன்று வந்தால் என்ன செய்வாய்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/121&oldid=802419" இலிருந்து மீள்விக்கப்பட்டது