பக்கம்:படித்தவள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 शााdf "இது ரொம்பவும் சின்ன விஷயம்; புதிய அவளிடத்தில் ஒரு உறுதி வாங்கிக் கொண்டால் போகுது; நீ யாரிடமும் இதைப் பற்றிப் பேசாதே" என்று சிரித்துக் கொண்டே சொன்னான். "உன் மீது நம்பிக்கை வைத்துத் தானே சத்தியம் கேட்டு வாங்கினாள்" "நம்பிக்கை இருந்தால் சத்தியம் எதற்கு? உறுதிகள் எதற்கு? என்னமோ கேட்டால் சரி என்றேன். காசா பணமா நகையா புடவையா, வெறும் வாய்ச் சொல்தானே". "அதனால் உனக்கு என்ன நன்மை?” "அவள் இராமாயணக் காலட்சேபம கேட்டுவிட்டு வந்தாள். அங்கே இராமசாமி சாத்திரிகள்; அவருக்கு ஒரு 'குவி கிளம்பிவிட்டது. இராமன் கதையை நடத்தினார். கோயிலுக்குப் போகிறேன் என்று போனவள் இந்தக் கோமாளித்தனமான பேச்சைக் கேட்டு ஏமாளியாகி விட்டாள்; எங்குப் பார்த்தாலும் பச்சைக் கொடிகள் ப்றந்து கொண்டிருந்தன. இச்சைபிறந்தது. கொச்சைத் தமிழ் அதனால் அவர் சிரிக்க வைத்தார். சீதையின் அசோகவனம் என்பதைப் பற்றிச் சித்திரித்துப் பேசினார். வல்லிய இடையை உடைய அரக்கிமார் மத்தியில் மெல்லிய இடையை உடைய சீதை புலிக் கூட்டத்திலே அகப்பட்ட இளமான் பிணைபோல இருந்தாளாம். சீதை எப்பொழுது குளிப்பாள்; இடையே இல்லாத அவள் எப்படி நடக்கிறாள் என்று காண அந்த அரக்கியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/122&oldid=802421" இலிருந்து மீள்விக்கப்பட்டது