பக்கம்:படித்தவள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 121 ஆவலோடு இருந்தனர். அவள் குளிக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லையாம். அவள் விட்ட கண்ணிர் அவள் மேனியை நனைத்ததாம். போகட்டும் அவள் மெல்லிய புடவையை உலர்த்தத் தானே வேண்டும் என்று எதிர் பார்த்தார்களாம். உடம்பு வெப்பம் தந்தது. அதைச் செப்பம் செய்ததாம்; அவனை நினைத்து விட்ட பெருமூச்சு அடைய முடியாத வேதனை ஒரே சூட்டை உண்டாக்கி விட்டதாம். புடவை தானாகக் காய்ந்து விட்டதாம். இப்படிச் சொன்னால் யார் தான் கேட்காதிருக்க முடியும். அனுமன் மோதிரம் தந்தானாம்; அய்யோ இது அரக்கர் நகருக்கு வந்து பழுதுபட்டு விட்டதே என்பதால் அழுது கண்ணிர் வடித்துக் கலசம் ஆட்டினாளாம். அதைத் தன் மார்பில் வைத்து அணைத்தாளாம்; அது உருகி விட்டது. மறுபடியும் கண்ணிர்பட்டது; இறுகிவிட்ட தாம். - அனுமனைச் சந்தித்த சீதை பழைய செய்திகளை எல்லாம் எழுதி வ்ைத்த ஏட்டில் இருந்து வரிசைப்படுத்தி வகைப்படுத்தி மிகைப்படுத்தாமல் கூறினாளாம். வந்து என்னைக் கைப்பிடித்த அந்தப் புது நாளில் இந்த இப் பிறவிகளில் இரண்டு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று வரம் தந்தானாம். அதைப் போய் அவன் செவியில் செப்புவாய் என்று கூறினாளாம். ஏன்? அதை மறந்து காட்டு வழியில் ஏதாவது மேட்டுக் குடி மகள் கிடைத்தால் அவள் பேச்சைக் கேட்டுக் கிறு கிறுத்து அவளைக் காதலிக்கிறேன் என்று உளறிவிடப் போகிறான் என்று அறிவுறுத்தினாளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/123&oldid=802422" இலிருந்து மீள்விக்கப்பட்டது