பக்கம்:படித்தவள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 एाdf உண்டாகாமல் போகாது என்ற எண்ணத்தை அவன் கிளறிவிட்டான். மதவியலில் சிக்குண்ட தேசங்கள் சமுதாய இயலில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மதச்சார்பு அற்ற நிலை உலகம் முழுவதும் பரவாமல் இருக்கும் என்று கூற முடியாது: கிழக்கும் மேற்கும் தெற்கும் வடக்கும் சங்கமிக்கும் காலம் வந்து கொண்டுதான் இருக்கிறது. தொடக்க காலத்தில் மதம் இனப்பற்று தேசப்பற்று இவற்றை உண்டாக்கியது. மக்களை ஒற்றுமைப்படுத்தியது. இன்று அரசியல் சமூக இயல் இந்த அடிப்படையில் ஒன்றுபடும் சூழ்நிலை வளர்ந்து விட்டது. மதம் பின்னுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது; இந்த நினைவுகள் எனக்குள் தோன்ற ஆரம்பித்தன. அவள் அறிமுகம் ஆனபிறகு பேசுவதற்கு ஒரு பொருளைத் தேர்ந்து எடுத்தாள். "உங்களுக்கு சினிமா பிடிக்குமா?" என்று கேட்டாள். “I love cinema” grairGmcür. அவள் சிரித்தாள். "ஏன் சிரிக்கிறீர்கள்?" "இந்தத் தலைப்பை டி.வி.யில் பார்த்துக் கற்றுக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்" "அதன் பாதிப்பு ஏற்படாமல் போகாது" என்றேன். "புதிய பாதை பார்த்திருக்கிறீர்களா" என்று கேட்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/170&oldid=802486" இலிருந்து மீள்விக்கப்பட்டது