பக்கம்:படித்தவள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் 167 கொண்டார்கள்; நீர் அங்கே கால் வைக்க முடியாது” என்றான். "என்னதான் எழுதுவது?" என்றேன். "எழுதி ஏட்டைக் கெடுத்தாலும் பரவாயில்லை; நாட்டைக் கெடுக்க வேண்டாம்" என்றான். இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது ஆட்டோவில் ஒரு மடமாது ஒருத்தியாக வந்து இறங்கினாள். அவள் கந்தசாமியின் அண்மை மனைவி அஞ்சலை என்பது அடையாளம் கண்டு கொண்டேன். நூல் உள்ளடக்கத்தில் பார்க்க வேண்டிய செய்தியை அட்டைப்படத் தலைப்பில் அவளைக் கண்டேன். கடைக்கு வந்து அவனுக்கு உதவ, எடுக்கப்பிடிக்க, சூடாக உரையாட அங்கு வந்திருந்தாள். என்னை மணவிழாவில் புத்தகப்பிரியன் என்று தன் பிரியதரிசினிக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தான். இன்று வேறு விதமாக அறிமுகம் செய்தது எனக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்தது. "இவர் மகன் பாகிஸ்தானிப் பெண்ணை மணம் செய்து கொண்டார்” என்று என் மகனை வைத்து என்னை அறிமுகம் செய்தான். இதில் என்ன பெருமை? மாறுபட்ட தேசங்கள் ஒன்று பட்டது போன்ற ஓர் உண்மையை வற்புறுத்தியது போல இருந்தது. யார் எதிர்பார்த்தார்கள்; இன்று இஸ்ரேலும் பாலஸ்த்தீனும் ஒற்றுமை காண்பார்கள் என்று. கிழக்கு ஜெர்மனியும் மேற்கும் இணைந்து விட்டது. பகைமை மறந்து இரண்டு தேசங்களும் சுமூக உறவு கொள்ள ஓர் வாய்ய்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/169&oldid=802484" இலிருந்து மீள்விக்கப்பட்டது