பக்கம்:படித்தவள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 Uाdf ‘கரித்துண்டு என்ற தலைப்பில் நூல் ஒன்று வந்திருக்கிறது; இது குப்பை மேடு" என்றான். "இதில் மூன்று கதைகள் இருக்கின்றன. முதல் கதை குப்பை மேடு, அடுத்தது சீற்றம்; மூன்றாவது அதிர்ச்சி; மூன்றும் புதிய சிந்தனைகள் கொண்டவை: கொண்டு வந்து வைத்திருக்கிறேன் விற்பனைக்கு" என்றான். "பழைய ஆசிரியர்கள்?" "அவர்கள் எழுதியவை நல்ல வரவேற்பு பெற்றன. காலத்தால் அவை பின்னடைகின்றன. பாராட்டலாம்: பயனில்லை; எழுத்து காலத்தோடு ஒட்டவேண்டும்" என்றான். "இலக்கியம் காலத்தை வெல்ல வேண்டும்" என்றேன். "மறுக்கவில்லை; அதனால் பயன் இல்லை; காலத்தோடு ஒட்ட வேண்டும்; புதிய சிந்தனைகளைத் தரவேண்டும்" என்றான். புத்தகக் கடை அனுபவம் அவனது; அதைக் கேட்டு வைத்தேன். "நான் ஏதாவது எழுதலாம் என்று நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?" என்று கேட்டேன். "இன்று மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை; ஆத்ம சிந்தனை அதுவே இன்றைய பிரச்சாரம்; அதில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்; வெற்றி பெறலாம்” என்றான். "அடுத்தது காதல்; அதுதான் இன்றைய படங்களில் மூலதனம்; அதைக் கவிஞர்கள் சொந்த உடைமையாக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/168&oldid=802483" இலிருந்து மீள்விக்கப்பட்டது