பக்கம்:படித்தவள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் 165 கடலைச் சுண்டலையும் தட்டில் வைத்துத் தந்தாள். அமீது இவற்றைச் சுவைத்து உண்டான். பாட்டியிடம் சொல்லி இதே போலத் தனக்குச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டான். பிரியாணி சாப்பிடும் அவன் இதைப் பிரியமாகச் சாப்பிடுவது எனக்கு வியப்பைத் தந்தது. அவன் தாய் அவனுக்கு அதிகம் பிரியாணி செய்து போட்டும் பழக்கம்: அது அவள் பின்னணி. 4 கந்தசாமியின் நூல் பண்ணைக்குச் சென்றேன்; நீதி битбоотбт எழுதிய காராமசாலாக்களை அடுக்கி வைத்திருந்தான். "இவை இலக்கியப் பண்ணையா?” என்று கேட்டேன். "தமிழகம் தாழ்ந்து விட்டது" என்றான். அதற்குமேல் தனிப்பட்ட ஒரு ஆசிரியரை விமரிசித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. "இலக்கியப் பண்ணை என்று பெயர் வைத்துக் கொண்டு குப்பை மேடாக ஆக்காதே’ என்று கூறினேன். "குப்பை மேடு என்ற தலைப்பில் அன்னை தெரிசாவின் படம் போட்டு ஒரு நூல் புதிதாக வெளி வந்திருந்தது. அதை அவன் வைத்திருந்தான். "இப்படியும் ஒரு தலைப்பா?" என்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/167&oldid=802482" இலிருந்து மீள்விக்கப்பட்டது